FIFA 2026: இந்திய வம்சாவளி கால்பந்து வீரர்கள் பட்டியல் மற்றும் விவரங்கள்!

சர்வதேசக் கால்பந்து அரங்கில் இந்திய மற்றும் தமிழ் அடையாளத்தைப் பறைசாற்றப்போகும் இளம் வீரர்களின் எழுச்சிமிக்க பயணம்.
FIFA 2026 | கால்பந்து வீரர்கள்
FIFA 2026 | கால்பந்து வீரர்கள்AI Image
Updated on

2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து உலகக்கோப்பை தொடர், ஜூன் 11ஆம் தேதி தொடங்கி ஜூலை 19ஆம் தேதி வரை அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், 48 அணிகள் பங்குபெறுகின்றன. அதில் இந்திய வம்சாவளி மற்றும் தமிழ் வம்சாவளி கால்பந்து வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த முறை முதல்முறையாக, தமிழ் வம்சாவளியை சேர்ந்த இரு வீரர்கள் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை கால்பந்து தொடரில் விளையாட உள்ளனர்.

நெதர்லாந்து நாட்டின் ஆரோன் வின்டர் (Aron Winter):

இவர் தான் உண்மையில் FIFA உலகக் கோப்பையில் விளையாடிய முதல் இந்திய வம்சாவளி கால்பந்து வீரர் ஆவார். அவர் சூரிநாமில் 1967 ம் ஆண்டு பிறந்தார். அவரது பெற்றோர் தற்போதைய உத்தரப் பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். 1990-ஆம் ஆண்டு இத்தாலி உலகக் கோப்பையில் அவர் நடுகள வீரராக விளையாடினார், அதில் நெதர்லாந்து அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனியிடம் தோற்றது. அதனைத் தொடர்ந்து 1994 மற்றும் 1998 ம் உலகக் கோப்பையிலும் நெதர்லாந்து நாட்டின் வீரராக விளையாடினார்.

பிரான்ஸ் தேசிய அணிக்காக விகாஷ் தோராசூ (Vikash Dhorasoo):

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு முன்னாள் பிரெஞ்சு தொழில்முறை கால்பந்து வீரர் ஆவார். மத்திய மிட்ஃபீல்டர் (Central Midfielder) நிலையில் விளையாடிய இவர், பிரான்ஸ் தேசிய அணிக்காக பல போட்டிகளில் பங்கேற்றுள்ளார். விகாஷ் தோராசூவின் மூதாதையர்கள் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விஜயநகரத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பையில் பிரான்ஸ் தேசிய அணிக்காக அவர் விளையாடினார். அந்த அணி இறுதிப் போட்டி வரை முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

நிஷான் வேலுப்பிள்ளை (Nishan Velupillay):

25 வயதான ஃபார்வர்டு ஆட்டக்காரரான இவர் 2026 கால்பந்து உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பிறந்த நிஷான் வேலுப்பிள்ளையின் தந்தை சசிநாத் வேலுப்பிள்ளை இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மலேசியாவை சேர்ந்தவர். இவரின் தாய் கில்லியன் வேலுப்பிள்ளை ஆங்கிலோ இந்தியர் ஆவார். நிஷான் வேலுப்பிள்ளை, க்லென் எய்ரா எவ்சி, மெல்பர்ன் விக்டரி ஆகிய கிளப்களுக்காக விளையாடியுள்ளார்.

2024 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா தேசிய அணியில் இடம் பிடித்த இவர், சீனாவிற்கு எதிரான தகுதி சுற்று போட்டியில், 83ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களம் புகுந்த நிஷான் வேலுப்பிள்ளை, அடுத்த 7வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இந்த போட்டியில், ஆஸ்திரேலியா 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அதைத்தொடர்ந்து இந்தோனேசியா மற்றும் சீனாவிற்கு எதிரான போட்டியிலும் விளையாடி இருந்தார். ஃபிஃபா உலகக் கோப்பையில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா, தனது ஆரம்பப் போட்டியில் ஜூன் 14ஆம் தேதி துருக்கியையும், ஜூன் 20ஆம் தேதி அமெரிக்காவையும், ஜூன் 26ஆம் தேதி பரகுவேவையும் எதிர்த்தாட உள்ளது.

FIFA world cup 2026
FIFA world cup 2026AI Image

சாமுவேல் மோட்டுசமி (Samuel Moutoussamy):

29 வயதான இவர் மிட் பில்டர். 2026 கால்பந்து உலகக்கோப்பைக்கான காங்கோ மக்களாட்சிக் குடியரசு அணியில் இடம் பிடித்துள்ளார். பிரான்சில் பிறந்த இவரின் முழுப்பெயர் சாமுவேல் ஆல்பர்ட் அலைன் ஆர்கேட் மோட்டுசமி ஆகும். இவரின் தந்தை தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட இந்தோ - குவாடலூப்பியர் ஆவார்.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோட்ட வேலைக்காக தென் இந்தியாவில் இருந்து பிரான்சின் ஆளுகையின் கீழ் உள்ள குவாடலூப்பியருக்கு அழைத்து வரப்பட்டவர் ஆவார். இவரின் தாய் காங்கோவை பூர்விகமாக கொண்டவர். 2019 ஆம் ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான இவர், காங்கோ ஜனநாயகக் குடியரசு அணிக்காக 57 போட்டிகளில் விளையாடியுள்ளார். காங்கோ அணி ஜூன் 17 ஆம் தேதி போர்ச்சுகலையும், ஜூன் 23 ஆம் தேதி கொலம்பியாவையும், ஜூன் 27 ஆம் தேதி உஸ்பெஸ்கிஸ்தானையும் எதிர்கொள்ள உள்ளது.

முகமது ஜம்ஷித் (Tahsin Mohammed Jamshid):

2026 கால்பந்து உலகக் கோப்பை தொடருக்கான கத்தார் அணியில், கேரளாவின் தலச்சேரியை பூர்வீகமாக கொண்ட 19 வயது இளம் வீரர் முகமது ஜம்ஷித் (Tahsin Mohammed Jamshid) களம் காண்கிறார். கத்தாரின் புகழ்பெற்ற கால்பந்து அகாடமியில் பயின்று திறமையை வளர்த்து கொண்ட இவர், தற்போது முன்னணி கிளப் அணியான அல்-துஹைல் எஸ்சி அணிக்காக விளையாடி வருகிறார். உலகக் கோப்பை வரலாற்றில் கேரளா மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு வீரர் கத்தார் தேசிய அணியில் இடம்பிடித்து விளையாடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவுக்கு மீண்டும் ஒரு அக்னிப் பரீட்சை! 2027 உலகக்கோப்பை உத்தேச தேதிகள் வெளியீடு..!
FIFA 2026 | கால்பந்து வீரர்கள்

சர்பிரீத் சிங், (Sarpreet Singh):

2026-ஆம் ஆண்டு நடைபெறும் ஆண்களுக்கான ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணிக்காக விளையாடும் சர்பிரீத் சிங், (Sarpreet Singh) அதில் பங்கேற்கும் முதல் சீக்கிய கால்பந்து வீரர் என்ற பெருமைக்குரியவர். சர்பிரீத் சிங், 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி ஆக்லாந்தில், இந்திய வம்சாவளி பஞ்சாபி பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். 17வயதில் ஆஸ்திரேலியாவின் உயர்மட்ட லீக்கில் தனது மூத்த அணியில் மிட்பீல்டராக அறிமுகமான அவர், தனது திறமையை வெளிப்படுத்தினார், பின்னர் ஜெர்மனியின் மாபெரும் அணியான பேயர்ன் முனிச்சால் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்ப்ரீத், நியூசிலாந்திற்காக இளையோர் மற்றும் மூத்தோர் மட்டங்களில் விளையாடியுள்ளார். 2017 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற FIFA U-20 உலகக் கோப்பைகளிலும், பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com