FIFA-வின் சிறந்த கால்பந்து வீரர் Lionel Messi.. சிறந்த வீராங்கனை Aitana Bonmatí!

Lionel Messi & Aitana Bonmatí
Lionel Messi & Aitana Bonmatí
Published on

ஆர்ஜென்டினாவின் கால்பந்து சூப்பர் ஸ்டார் Lionel Messi, சர்வதேச அளவில் சிறந்த கால்பந்து வீர்ருக்கான விருதை பெற்றுள்ளார். கடந்த நான்கு வருடங்களில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த விருதை மெஸ்ஸி பெற்றுள்ளார்.

முதலிடத்தை பெறுவதில் நார்வேநாட்டு வீரர் எர்லிங் ஹாலண்டுக்கும் மெஸ்ஸிக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் மெஸ்ஸி வெற்றிபெற்றார். ஹாலண்ட் இரண்டாவது இடத்தையும் கைலியன் எம்பாப்பே மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

ஸ்பெயின் நாட்டின் பார்ஸிலோனா பெண் கால்பந்து வீராங்கனை Aitana Bonmatí மகளிர் பிரிவில் சிறந்த சர்வதேச வீர்ர் விருதை தட்டிச் சென்றார். இரண்டாவது இடத்தை லிண்டா கஸிடோவும் மூன்றாவது இடத்தை ஜென்னி ஹெர்மோசோவும் பெற்றனர். லண்டனில் நடைபெற்ற கோலாகல நிகழ்ச்சியில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

மான்செஸ்டர் சிட்டி அணியின் பயிற்சியாளர் பெப் கார்டியோலா 2023 ஆம் ஆண்டுக்கான ஆடவருக்கான சிறந்த நிர்வாகிக்கான விருதையும், இங்கிலாந்து பயிற்சியாளர் சரினா வீக்மன் சிறந்த பெண் பயிற்சியாளருக்கான விருதையும் பெற்றனர். சரினா, நான்காவது முறையாக இந்த விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் சிறந்த கோல் கீப்பருக்கான விருதை ஆடவர் பிரிவில் மான்செஸ்டர் சிட்டி அணியின் கோல் கீப்பர் எடர்சன் வென்றார். மகளிர் பிரிவில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கோல் கீப்பர் மேரி எர்ப்ஸ் விருது பெற்றார்.

2022 –லும் லயோனல் மெஸ்ஸி சிறந்த கால்பந்து வீர்ர் விருதை வென்றார். கத்தாரில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஆர்ஜென்டினா அணியை சிரப்பாக வழிநடத்தியதற்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். லீக் போட்டியில் இன்டர் மியாமி அணி லீக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் மெஸ்ஸி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சீசனில் எர்லிங் ஹாலண்ட் மொத்தம் 52 கோல்கள் போட்டிருந்தார். ஆனால், அவரைவிட மெஸ்ஸி அதிக கோல்கள் போட்டு (54) இருந்ததால் முன்னிலைப் பெற்றார். 2019 ஆம் ஆண்டில் மெஸ்ஸி ஆடவர் பிரிவில் சிறந்த கால்பந்து வீர்ர் விருதை பெற்றிருந்தார். தனிப்பட்ட முறையில் மெஸ்ஸி 8-வது முறையாக விருது பெற்றுள்ளார். இதற்கு முன்னர் 2009, 2010, 2011, 2012 மற்றும் 2015 இல் மெஸ்ஸி சிறந்த ஆட்டக்காரர் விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தரவரிசையில் மெஸ்ஸி, ஹாலண்ட் இருவரும் 48 புள்ளிகள் எடுத்திருந்தனர். எனினும் மெஸ்ஸி, சிறந்த வீர்ருக்கான விருதை தட்டிச் சென்றார். தேசிய அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அளித்த வாக்கு விகித்ததில் முன்னிலை பெற்றதால் லயோனல் மெஸ்ஸி விருத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய கால்பந்து அணி கேப்டன் சுநீல் சேத்ரி, ஹாரி கானே, முகமது சலா ஆகியோர் மெஸ்ஸிக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். ஆர்ஜென்டினா தலைவர் எம்பாப்பே அவரது கூட்டாளி ஜூலியன் அல்பவரேஸ் இருவரும் ஹாலந்துக்கு வாக்களித்தனர்.

இதனிடையே பார்சிலோனா கால்பந்து வீராங்கனை அய்டனா பொன்மதி, சர்வதேச அளவில் சிறந்த பெண் கால்பந்து வீராங்கனைக்கான விருதை (2023) தட்டிச் சென்றார். 25 வயதான பொன்மதி, நடுகள ஆட்டக்காரர். 2023 இல் ஸ்பெயின் உலக கோப்பை பட்டம் வெல்ல இவர் காரணமாக இருந்தார்.

இதையும் படியுங்கள்:
ஆளுமைத்தன்மையை வளர்த்துக் கொள்ள 5 சிறந்த வழிகள்!
Lionel Messi & Aitana Bonmatí

சிறந்த கால்பந்து வீராங்கனையாக என்னை பரிந்துரை செய்தவர்களுக்கு நன்றி. மேலும் விளையாட்டின் விதிகளையும் உலகத்தையும் மாற்றியமைக்கும் சக்திவாய்ந்த பெண்களில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று பொன்மதி கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு எனக்கு மறக்கமுடியாத தனித்துவமான ஆண்டாகும். 2024 இன் தொடக்கத்தில் விருதுபெறுவதையும் மறக்கமுடியாது. பார்சிலோனா அணிக்கு நான் மிகவும் கடைமைப்பட்டிருக்கிறேன் என்று அவர் மேலும் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com