

உலகக்கோப்பை வரலாற்றில் பிரேசில் மற்றும் இத்தாலி அணிகள் நிகழ்த்திய அசாத்திய கால்பந்து சாதனைகள்
தென் அமெரிக்க நாடான பிரேசில் அதிகமுறை உலகக் கோப்பையை வென்ற நாடுகளில் முதலிடத்தில் உள்ளது.1958ஆம் ஆண்டில் முதல் முறையாக சாம்பியன் ஆன பிரேசில், அதனைத் தொடர்ந்து 1962, 1970, 1994 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் கோப்பையைக் கைப்பற்றியது. 6 முறை இறுதிப்போட்டிக்கு சென்ற பிரேசில், 22 முறை உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளது. கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த அணிகளின் பட்டியலில் பிரேசில் முதலிடத்திலும், ஜெர்மனி இரண்டாம் இடத்திலும் உள்ளன. இதுவரை இரண்டு அணிகள் மட்டுமே, தொடர்ந்து 2 முறை கோப்பைகளை வென்றுள்ளது. 1958 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் பிரேசில் அணியும்,1934, 1938 ஆகிய ஆண்டுகளில் இத்தாலி அணியும், தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பை வென்ற அணிகளாக இருக்கிறது.
மாரக்கானா மைதானத்தின் அசுர கூட்டம் மற்றும் 'பெர்னின் அதிசயம்' தந்த மெய்சிலிர்க்கும் கால்பந்து சாதனைகள்
பிரேசில் (ரியோ டி ஜெனிரோ, Rio de Janeiro, Brazil) மரக்கனா (Maracana) விளையாட்டரங்கம் உலகக்கோப்பைப் போட்டியைக் காண அதிக ரசிகர்கள் கூடிய அரங்கம் இதுவே.1950ஆம் ஆண்டு உருகுவே - பிரேசில் இடையே இறுதியாட்டம் நடந்தது.
அதைக் காண 1,73,850 ரசிகர்கள் திரண்டதாக கின்னஸ் உலகச் சாதனை இணையப்பக்கம் குறிப்பிடுகிறது. அது அதிகாரபூர்வமாகப் பதிவான எண்ணிக்கை. நுழைவுச் சீட்டு வாங்காதவர்களையும் கணக்கிட்டால் சுமார் 200,000 பேர் ஆட்டத்தை நேரில் கண்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
கால்பந்து உலகக் கோப்பையைத் தட்டிச் செல்ல அனைத்து அணிகளும் தீவிரமாக உழைப்பதுண்டு. அதுவும் சொந்த நாட்டில் வெற்றி பெற்றால் அதற்கு ஈடு இணையே இல்லை. இதுவரை ஒரு சில அணிகளே அந்த வெற்றிக் கனியைச் சுவைத்துள்ளன. அவை உருகுவே (1930), இத்தாலி (1934), இங்கிலாந்து (1966), மேற்கு ஜெர்மனி (1974), அர்ஜென்டினா (1978), 1998ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் பிரஞ்சு அணி சொந்த மண்ணில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் எந்த அணியும் சொந்த மண்ணில் வெற்றி பெறவில்லை.
2018 ஃபிஃபா உலகக் கோப்பையில், நியாயமான விளையாட்டு சமநிலை முறிவு( Fair play)விதியின் அடிப்படையில் நாக்-அவுட் சுற்றுகளுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை ஜப்பான் பெற்றது.
ஒரே பிரிவில் இருந்த ஜப்பான் மற்றும் செனகல் அணிகள் தலா 4 புள்ளிகள் பெற்றன, கோல் வித்தியாசமும் சமநிலையில் இருந்தது. இதனால் குரூப் H-இல் செனகலை விட குறைவான மஞ்சள் அட்டைகளை (4) பெற்றிருந்ததால் (செனகல் 6), ஜப்பான் செனகலை முந்தி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் தென் அமெரிக்கா அணிகளுக்கு எதிராக ஆசிய அணிகள் 17 முறை மோதின இதில் ஒன்றில் கூட வென்றது கிடையாது. முதல் முறையாக 2018 ம் ஆண்டு ஜப்பான் கொலம்பியா அணியை வென்று சாதனை படைத்தது.
2026 தொடரில் 1000-மாவது போட்டியின் வரலாற்று மைல்கல் மற்றும் குராசோ தீவின் புதிய கால்பந்து சாதனைகள்
1930-ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக் கோப்பை தொடரில் 13 அணிகள் மட்டுமே பங்கேற்றன. தற்போது நடைபெற்று வரும் 23-வது உலகக் கோப்பை தொடரில் 48 அணிகள் களமிறங்கியுள்ளன. இதற்கு முன் உலகக் கோப்பையின் 100-வது போட்டி 1954-ம் ஆண்டு தொடரிலும், 500-வது போட்டி 1994-ம் ஆண்டு தொடரிலும் நடைபெற்றது. தற்போது இந்த உலகக் கோப்பை தொடரில் 1000-வது போட்டி 21-06-2026 அன்று நடைபெற்றது உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முக்கியமான இடத்தை பெறும் இந்த 1000-வது போட்டியில் ஜப்பான் மற்றும் துனிசியா அணிகள் களமிறங்கின. மாண்டெரேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஜப்பான் அணி வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக சுய கோல்களை (Own Goals) அடித்த அணி என்ற மோசமான சாதனையை மெக்சிகோ கொண்டுள்ளது. மெக்சிகோ வீரர்கள் இதுவரை 4 முறை தங்களது சொந்த வலைக்குள் தவறுதலாக கோலடித்துள்ளனர்.
4 முறை உலக கோப்பையை வென்ற இத்தாலி மற்றும் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவும் 2018 ம ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி க்கு தகுதி பெறாத நிலையில் உலகின் சிறிய நாடான ஐஸ்லாந்து உலக கோப்பை வரலாற்றில் முதன் முறையாக விளையாட தகுதி பெற்று சாதனை படைத்தது.
1954 உலகக் கோப்பை கால்பந்து லீக் சுற்றில் ஹங்கேரியிடம் 8-3 என படுதோல்வி அடைந்த மேற்கு ஜெர்மனி, இறுதிப் போட்டியில் அதே அணியை 3-2 என வீழ்த்தி கோப்பையை வென்றது. இது கால்பந்து வரலாற்றில் 'பெர்னின் அதிசயம்' (Miracle of Bern) என்று அழைக்கப்படுகிறது.
2022 இல் நடந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் அனைத்து ஆட்டங்களிலும் தோல்வி கண்டது கத்தார். இதில் வேடிக்கையான விஷயம் உலகிலேயே அதிக பொருட்செலவில் அந்த உலகக் கோப்பை போட்டியை நடத்தி சாதனை படைத்தது கத்தார் தான்.
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் பங்கேற்கும் மிகச்சிறிய தீவு நாடு என்ற பெருமையை 2026-ல் பெற்று சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது குராசோ (Curaçao) தீவு. இந்த நாட்டைச் சேர்ந்த 37 வயதான கோல்கீப்பர் எலாய் ரூம்(Eloy Room), ஈக்வடார் அணிக்கு எதிரான ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் 90 நிமிடங்களுக்குள் 15 கோல்களைத் தடுத்து புதிய உலக சாதனையைப் படைத்தார்.
இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை கோலைத் தடுத்த இரண்டாவது வீரராகவும், குராசோ அணி உலகக் கோப்பையில் தனது முதல் புள்ளியைப் பெறவும் முக்கிய காரணமாக இருந்தார். முன்னதாக அமெரிக்காவின் டிம் ஹோவர்ட் 2014 உலகக் கோப்பையில் 16 கோல்களைத் தடுத்ததே உலக சாதனையாக உள்ளது.
சர்வதேச கால்பந்து விளையாட்டின் அசுர வளர்ச்சி, ஜாம்பவான் அணிகளின் வீழ்ச்சி மற்றும் சிறிய தீவு நாடுகள் உலகமே வியக்கும் வண்ணம் நிகழ்த்திய வரலாற்று சாதனைகள் குறித்த துல்லியமான புள்ளிவிவரங்களை அறிந்து, எந்தவொரு விளையாட்டு விவாதத்திலும் உங்களின் விளையாட்டு நிபுணத்துவத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்தலாம்.