உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வாஷிங்டன் சுந்தர் இல்லையென்றும், அவருக்கு பதிலாக வேறு ஒரு வீரரை கம்பீர் தேர்ந்தெடுக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதுவும் ஐந்து நாட்களுக்கு குறைவான நாட்களிலேயே ஆட்டத்தை முடித்தது. இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பானில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதன் முதல் நாள் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் பாதியிலேயே ஆட்டம் நின்றது. பின் அடுத்தடுத்த நாட்கள் விறுவிறுப்பாக போட்டி நடைபெற்றது. இந்த மூன்றாவது போட்டி ட்ராவில் முடிந்தது.
இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிவில் யாரும் எதிர்பாராத ஒரு விஷயம் நடந்தது. இந்திய அணியின் முன்னணி பவுலரான அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்களும் கண் கலங்கியப்படி விடை கொடுத்தனர். ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனையடுத்தது அஸ்வின் தனக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார். மேலும் வாஷிங்டன் சுந்தருடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து துப்பாக்கியை புடிங்க வஷி என்று பதிவிட்டிருந்தார்.
அதாவது சினிமா துறையை விட்டு விலகவுள்ள விஜய் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கொடுத்தார். அதாவது அவருடைய சினிமா பொறுப்பை ஒப்படைத்ததுபோல் பேசப்பட்டது.
அதேபோல் அஸ்வின் தன்னுடைய பொறுப்பை வஷியிடம் ஒப்படைத்ததுபோல் துப்பாக்கியை புடிங்க வஷி என்று பதிவிட்டிருந்தார்.
இதனால், இனி அஸ்வின் இடத்தில் வாஷிங்டன் சுந்தர் இருப்பார் என்றே கருதப்பட்டது. ஆனால் நடுவில் இந்த கௌசிக் வந்தால் என்பதுபோல் கம்பீர் வேறு ஒரு திட்டம் வைத்திருக்கிறார்.
அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கம்பீர் தேர்ந்தெடுத்த அந்த வீரர் சவுரப் குமார். இதுவரை முதல் தர டெஸ்ட்டில் 72 போட்டியில் விளையாடி 312 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 25 முறை 5 விக்கெட்டுகளும், ஐந்து முறை 10 விக்கெட்டுகளும் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா உடன் விளையாடும் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சுந்தர் விளையாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.