மணிப்பால் டைகர்ஸ் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா கேபிடல்ஸ் அணி தோல்வி அடைந்து லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் 2023- லிருந்து வெளியேறியது. இந்தியா கேபிடல்ஸ் அணித் தலைவர் கெளதம் கம்பீர் 5 பந்துகளில் 10 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட்டானார்.
கம்பீர், பந்தை கவர் திசைக்கு அனுப்பிவிட்டு குவிக் சிங்கிள் எடுக்க முயன்றார். ஆனால் பீல்டர் அமிடோஸ் சிங் வீசிய பந்து குறி தவறாமல் ஸ்டம்பில் பட்டதை அடுத்து கம்பீர் அவுட்டாகி வெளியேறினார். லெஜன்ட்ஸ் லீக் போட்டியில், அதாவது முன்னாள் வீவர்களுக்கு இடையே நடந்த போட்டியில் கெளதம் கம்பீர் 6 போட்டிகளில் விளையாடி 144 ரன்கள் எடுத்தார். இரண்டு போட்டிகளில் அவர் அரை சதம் எடுத்தார்.
கெளதம் கம்பீர் ரன் அவுட்டாகி வெளியேறியதை மற்றொரு முன்னாள் வீர்ரான ஸ்ரீசாந்த், ஸ்கிரீன்ஷாட் எடுத்து விடியோவாக வெளியிட்டு கொண்டாடினார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், கம்பீரை அவுட்டாக்கிய கள வீர்ர் அமிடோஸை அவர் வெகுவாக பாராட்டியிருந்தார். ஏற்கெனவே இரு வீர்ர்களுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.
தன்னை ஒரு “மேட்ச் பிக்ஸர்” என்று கம்பீர் பலமுறை கூறி கிண்டல் செய்து வந்ததாகவும் ஸ்ரீசாந்த் சமூகவலைத் தளங்களில் குறிப்பிட்டிருந்தார். போதாக்குறைக்கு அவரது மனைவி புலனேஸ்வரி குமாரியும், கெளதம் கம்பீரை கடுமையாக விமர்சித்திருந்தார்.
“நீங்கள் ஒரு விளையாட்டு வீர்ருக்கு உண்டான எல்லையைக் கடந்து செயல்படுகிறீர்கள், உங்கள் அருகில் இருப்பவர்களை சகோதரனாக கூட பார்ப்பதில்லை. மக்கள் பிரதிநிதி போல செயல்பட வேண்டிய நீங்கள், ஒவ்வொரு சக கிரிக்கெட் வீர்ர்களிடமும் மோதலில் ஈடுபட்டு வந்துள்ளீர்கள். உங்கள் பிரச்னைதான் என்ன? உங்களது செயல்களை நான் மவுனமாக பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால், என்னை “மேட்ச் பிக்ஸர்” என முத்திரை குத்தி பேசிவந்தீர்கள். தெரியமல்தான் கேட்கிறேன். நீங்கள் என்ன உச்சநீதிமன்றத்தைவீட உயர்ந்தவரா?” என்று கெளதம் கம்பீரை பற்றி காட்டமாக விமர்சித்திருந்தார்.
ஆனால், கெளதம் கம்பீர், ஸ்ரீசாந்தின் சர்ச்சைக்கிடமான விமர்சனங்களுக்கு பதிலளிக்கவே இல்லை. போட்டிக்கு பின் நடைபெற்ற விளக்க காட்சியில் தனது அணியின் செயல்திறனமைப் பற்றி மட்டுமே பேசினார்.
லெஜன்ட்ஸ் லீக் போட்டியில் மணிப்பால் அணியிடம் தோற்றதால் இந்தியா கேபிடல்ஸ் அணி, தகுதி சுற்றிலிருந்து வெளியேறியது.