என் வேலையை ஈஸியாக்கிட்டார் - சூர்யகுமார் குறித்து கம்பீர் சொன்ன ரகசியம்..!

suryakumar gambir
suryakumar gambir source:dinamalar
ம.வசந்தி

மங்கையர் மலரின் நீண்டகால வாசககயான எனக்கு, புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். ஊக்கப்படுத்துவதும் உற்சாகப்படுத்துவதும் செயலற்றவர்களையும் ,செயல்பட வைக்கும் என்பதால், மோட்டிவேஷன் கட்டுரைகள் எழுவது மிகவும் பிடித்தமான ஒன்று .எனது எண்ணங்கள் நேர்மறையான சிந்தனை கொண்ட   கல்கி குழுமத்தோடு ஒன்றிப் போவதால் அவர்களுடன் கைகோர்த்து வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

Updated on: 

2023ம் ஆண்டு முதல் இந்திய டி-20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் (35)இருந்து வருகிறார். இவரது தலைமையில் இந்திய அணி பங்கேற்ற 41 போட்டிகளில் 33 இல் வெற்றியும் 6 தோல்வியையும் சந்தித்துள்ளது வெற்றி சதவிகிதம் 80.48 ஆக உள்ள நிலையில் இந்திய அணி ஒரு முறை கூட டி20 தொடரை இழந்ததில்லை.

தற்போது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் பத்தாவது டி20 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டுகள் ,அடுத்தடுத்து சரிந்த போதும் இந்தியா எடுத்த 161 ரன்களில் பாதிக்கும் மேல் 84 ரன்களை எடுத்து ,களத்தில் நிதானமாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.

இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் காம்பீர்(44) கூறும் போது, களத்தில் செயல்படுவது, பேட்டராக விளாசுவது, சக வீரர்களுடன் பேசுவது, பழகுவது, நேரத்தை செலவிடுவது என பல்வேறு விஷயங்களிலும் தலைமை பண்பு கொண்டவராக சூர்யகுமார் யாதவ் திகழ்கிறார்.இதனால் டி -20 அணியில் எனது பயிற்சியாளர் பணியை எளிதாக மாற்றி விடுகிறார்.

அணியில் எப்போதும் அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும் என்பதுதான் எந்த ஒரு பயிற்சியாளரின் விருப்பமாகவும் இருக்கும். இதனை சூர்யகுமார் மிகச் சரியாக செய்வதால் பயிற்சியாளரான எனக்கு அணியின் வெற்றிக்காக கூடுதலாக சிந்திக்க வாய்ப்பும்,நேரமும் கிடைக்கிறது.

என்னை பொறுத்தவரை, சூர்யகுமார் தன்னுடைய கேப்டன் பதவியில் அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்றுள்ளார் என நினைக்கிறேன். நெருக்கடியான சூழ்நிலைகளில் நிதானமாக செயல்பட்டு சரியான முடிவை எடுக்கும் சூர்யகுமார் இந்திய அணியை வழிநடத்துவது 'இந்திய அணியின் அதிர்ஷ்டம்' எனலாம் என்று கூறினார்.

ஒரு அணி வெற்றி பெற வேண்டுமென்றால் அணியின் பயிற்சியாளரும், கேப்டனும் ஒருமித்த கருத்தோடு இணைந்து செயலாற்றினால் அந்த அணியில் உள்ளவர்களின் கூட்டு முயற்சியினால் எத்தகைய இக்கட்டான நிலையையும் கடந்து வந்து வெற்றி பெறலாம். அந்த வகையில் இந்திய ஆண்கள் கிரிக்கெட்டின் டி20 அணியின் கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளது அணியின் வெற்றிக்கு உதவி புரியும்.

இதையும் படியுங்கள்:
T20 உலக கோப்பை வரலாற்றில் மறக்க முடியாத 10 தருணங்கள்..!
suryakumar gambir
logo
Kalki Online
kalkionline.com