

1.தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் செப்டம்பர் 24 ,2007 ல் முதல் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 4 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டபோது, 20வது ஓவரின் மூன்றாவது பந்தில் ஜோகிந்தர் சர்மாவின் பந்து வீச்சில் மிஸ்பா- உல்-ஹக் கேட்ச்சை ஸ்ரீ சாந்த் பிடித்த தருணம் இந்தியர் அனைவரும் இருக்கையை விட்டு எழுந்த நிமிடமாக இருந்தது.
2. செப்டம்பர் 19, 2007, டர்பனில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து உலகக் கோப்பை போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் இந்தியாவின் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்தது மறக்க முடியாத நிகழ்வாக இருக்கிறது.
3. இந்தியா - பாகிஸ்தான் இடையே டர்பனில் செப்டம்பர் 14, 2007 ல் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை போட்டி பவுல் அவுட் முறையில் தீர்மானிக்கப்பட்ட ஒரே டி20 உலக கோப்பை போட்டி ஆகும். ஹர்பஜன் சிங் ,வீரேந்தர் சேவாக் ராபின் உத்தப்பா வெற்றிகரமாக ஸ்டெம்புகளை தாக்கி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தனர்.
4. ஜோகன்னஸ்பர்க்கில் செப்டம்பர் 11 தென் ஆப்பிரிக்கா மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் கெயில் 57 பந்துகளில் 117 ரன்கள் எடுத்த போதும் வெஸ்ட்இண்டீஸ் அணி 205 ரன்கள் மட்டுமே குவித்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது .
5. இங்கிலாந்துக்கு எதிரான 2016 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் மேற்கிந்தியதீவுகளின் வெற்றிக்கு 6 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட்டபோது பென்ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் கார்லோஸ் பிராத்வைட் தொடர்ந்து 4 சிக்ஸர்கள் அடித்து மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றி பெற செய்தார்.
6. பார்படாசில் ஜூன் 29, 2024 உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டியில் இறுதி ஓவரின் முதல் பந்தில் தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் பவுண்டரிக்கு தூக்கிய அடிக்க அனைவரும் சிக்சர் என பதற,மின்னலாக பாய்ந்து சூரியகுமார் யாதவ் கேட்ச் பிடித்தது மறக்க முடியாதது.
7. அக்டோபர் 23 ,2022 மெல்போர்னில் பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற 8 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டபோது விராட் கோலி நிலைத்து நின்று பவுண்டரிகளை அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.
8. இந்தியாவுக்கு எதிராக பெங்களூருவில் மார்ச் 23 ,2016 டி20 உலக கோப்பை சூப்பர் 10 போட்டியில் வங்கதேச அணிக்கு 1 பந்தில் 2 ரன்கள் வெற்றி பெற தேவைப்பட்டபோது தோனியின் மின்னல் வேக முயற்சியில் முஸ்தாபிசூர் அவுட்டாகி 1 ரன்னில் இந்தியா வெற்றி பெற்றது .
9. 2010, மே14 ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் டி20 உலக கோப்பையின் இரண்டாவது அரை இறுதியில், கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட மைக்கேல் ஹசி இரண்டாவது ,மூன்றாவது மற்றும் ஐந்தாவது பந்தில் ஒரு சிக்ஸர் மற்றும் 20வது ஓவரின் 4,வது பந்தில் சயத் அஜ்மல் பந்துவீச்சில் ஒரு பவுண்டரி அடித்து ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
10. 2024 ஜூன் 24 கிங்ஸ்டனில் நடைபெற்ற டி20 உலக கோப்பையின் கடைசி சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் வங்கதேசத்தை எதிர்கொண்ட நிலையில் போட்டி மழை குறுக்கீடு இருந்த நிலையில் நேரத்தை வீணடிக்க ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் குல்படின் நைப் தடுமாறும் வகையில் செயல்பட்டது மறக்க முடியாத தருணமாக அமைந்தது.