Gautam Gambir and ABD
Gautam Gambir and ABD

ஹார்திக் பற்றி பேசிய ABDக்கு நோஸ் கட் கொடுத்த கவுதம் கம்பீர்!

கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக இருந்து வரும் ஏபிடி மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகியோர் ஹார்திக் பாண்டியா குறித்து பேசினர். இதற்கு கவுதம் கம்பீர் அவர்களை கடுமையாகத் தாக்கி பேசியிருக்கிறார்.

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். அது ரசிகர்கள், கிரிக்கெட் வட்டாரத்தினர் என யாருக்குமே பிடிக்கவில்லை என்பதே உண்மை. இதனால், ஹார்திக் பாண்டியா நிறைய எதிர்ப்புகளைத் தாங்கிக்கொண்டு வெளியில் முகம் சுளிக்காமல், விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

இருப்பினும் கூட, மும்பை அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியவில்லை. அந்தநிலையில், “மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா சரியாக செயல்படவில்லை. அவர் உண்மையாக நடந்து கொள்ளவில்லை. எதிரணிகளிடம் தற்பெருமையுடன் நடந்து கொண்டார்" என முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் ஏபி டிவில்லியர்ஸ் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

அதேபோல் கெவின் பீட்டர்சனும் ஹார்திக் பாண்டியாவின் கேப்டன்ஸியை விமர்சனம் செய்து பேசியிருந்தார். தற்போது இவர்கள் இருவருக்கும்தான் கவுதம் கம்பீர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, "ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் கெவின் பீட்டர்சன் கேப்டன்களாக இருந்தபோது அவர்களின் செயல்பாடு எப்படி இருந்தது? அவர்கள் கேப்டன்களாக இருந்தபோது அவர்களின் செயல்பாடு நன்றாகவே இல்லை. சுத்தமாக ஒன்றுமில்லை. அவர்களுடைய சாதனைகளை எடுத்துப் பார்த்தால் கேப்டனாக மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது." என்று விளாசினார்.

மேலும் "ஏபிடி ஐபிஎல் தொடரில் எந்த போட்டியிலும் கேப்டனாக செயல்பட்டதாக எனக்கு தெரியவில்லை. அவர் எடுத்த ஸ்கோர்களின் மூலமாகவும் பெரிதாக எதையும் சாதித்ததாக எனக்குத் தெரியவில்லை. ஒரு அணிக்காகவும் அவர் எதையும் சாதித்ததாக எனக்கு தெரியவில்லை.

இதையும் படியுங்கள்:
IPL தொடரிலிருந்து 7 முக்கிய வீரர்கள் விலகல்… எந்த அணிக்கு அதிக பாதிப்பு?
Gautam Gambir and ABD

ஆனால் ஹார்திக் பாண்டியா ஐபிஎல் கோப்பை வென்ற கேப்டன் ஆவார். எனவே நாம் ஆரஞ்சு பழங்களை ஆரஞ்சு பழங்களுடன்தான் ஒப்பிட வேண்டும். ஆப்பிளுடன், ஆரஞ்சு பழத்தை ஒப்பிடக்கூடாது." என்று அவர் தன் ஸ்டைலில் பதிலளித்தது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

இதனையடுத்து இந்த பதில் அவர்களுக்கு மட்டுமல்லாது, ஹார்திக் பாண்டியாவின் கேப்டன்ஸிக்கு கேள்வி எழுப்பும் அனைவருக்குமே வாயடைத்த பதிலாக அமைந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com