இந்திய கிரிக்கெட்டை மாற்றியமைக்க சச்சின், டிராவிட் தலைமையில் உயர்மட்டக் குழு: கவாஸ்கர் பரிந்துரை!

உள்நாட்டு கிரிக்கெட் மனப்பான்மையை விமர்சித்து பிசிசிஐக்கு ஜாம்பவான் கவாஸ்கர் விடுத்துள்ள அதிரடி அழைப்பு.
Sunil Gavaskar
Gavasksr Indian Express & Facebook
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் மிட்-டே என்னும் வட இந்திய ஊடகத்திற்காக எழுதியுள்ள கட்டுரை , விளையாட்டுத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கவாஸ்கர், எப்போதும் கிரிக்கெட் சார்ந்த சிந்தனைகளில் மற்றும் அது சம்பந்தமான நடவடிக்கைகளில் மூழ்கி இருப்பவர்.

இந்திய கிரிக்கெட் அணியை மேம்படுத்துவதிலும் அதற்கு ஆலோசனை கூறுவதிலும் கவாஸ்கர் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார். சில நேரங்களில் அவரது கருத்துக்களில் கடுமையான விமர்சனமும் சில நேரங்களில் சர்ச்சைகளும் கூட இருக்கும். கவாஸ்கர் எழுதிய கட்டுரையில் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் வீரர்களின் மனப்பான்மை குறித்து ஏராளமான கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 2026 துலீப் டிராபி இறுதிப் போட்டியில், இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணி விளையாடிய விதம் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளார். கிழக்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் வெற்றியிருந்த முன்னிலையை மட்டுமே போதும் என்ற மனநிலையில் , இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாட முயற்சி செய்யாமல், நிதானமாக விளையாடிய விதம் சரியானது அல்ல. உள்நாட்டு போட்டிகளில் பெற வேண்டிய வெற்றியை முக்கியமானதாக விளையாட்டு வீரர்கள் கருதாததே இந்த அலட்சியத்திற்கு காரணம் என்று கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் உள்நாட்டு விளையாட்டு போட்டிகளில் இது போன்று விளையாடும் அனுகுமுறையே , அவர்களின் சர்வதேச போட்டிகளிலும் எதிரொலிக்கிறது. இது போன்ற அணுகுமுறையினால் தான் சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 5 வது நாள் , இந்திய பந்துவீச்சாளர்கள் இலங்கை அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தாமல் , போட்டியை டிராவிற்கு கொண்டு சென்று விட்டனர். அலட்சியம் போட்டியை வெல்வதைவிட டிரா செய்தாலே போதுமானது என்ற மனநிலையை கொண்டு வந்துவிட்டது.

Gavasksr and sachin
sunil gavaskar Cricinfo

மேலும் கவாஸ்கர் இந்திய அணியை வலுப்படுத்துவதற்கு ஒரு பெரிய பரிந்துரையையும் வழங்கி உள்ளார். அதன்படி பிசிசிஐ (BCCI) நிர்வாகம் உடனடியாக ஒரு உயர்மட்ட ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும். அந்த உயர்மட்ட ஆலோசனை குழுவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பலரும் இடம் பெற வேண்டும், அவ்வாறு இடம் பெறும் வீரர்களின் பட்டியலையும் கவாஸ்கர் தயாரித்துள்ளார்.

அந்த பட்டியலின் படி ​உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களாக இருந்த இந்திய வீரர்களான சச்சின் டெண்டுல்கர் , ​ராகுல் டிராவிட் , சவுரவ் கங்குலி , வீரேந்திர சேவாக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இந்திய அணிக்கு கடினமான சூழல்களில் எதிரணியை எவ்வாறு பந்தாடுவது என்று ஆலோசனைக் கூறுவார்கள். அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோரது ஆலோசனை அணியின் பந்து வீச்சினை மேம்படுத்தும் . ரவி சாஸ்திரியின் அனுபவங்கள் அணியின் ஆல்ரவுண்டர்களை ஊக்குவிக்கும்.

இந்த ஆலோசனைக் குழு , இந்திய அணியின் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) தலைவருடன் நேரடியாக விவாதங்களில் ஈடுபட வேண்டும். இதன் பின்னர் எடுக்கப்படும் முடிவுகள் இந்திய அணியை வலிமை மிக்கதாகவும் , அதிக வெற்றியை குவிக்கக் கூடிய வகையில் மாற்றும் என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.இது போன்ற ஆலோசனைக் குழு ஆடவர் கிரிக்கெட் உடன் முடிந்து விடாமல், மகளிர் அணியை வலிமைப்படுத்துவதிலும் ஒரு ஆலோசனைக் குழு நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
ஒரே நாளில் 500 ரன்கள், 8 மெய்டன் ஓவர்கள்: கிரிக்கெட் வரலாற்றின் டாப் 3 மர்மங்களும் சாதனைகளும்!
Sunil Gavaskar
logo
Kalki Online
kalkionline.com