ஆடுகளத்தைப் பார்த்தால்தான் கில்லுக்கு கழுத்து வலி வரும் – ஸ்ரீகாந்த்!

Subman Gill with Srikanth
Subman Gill with Srikanth
Published on

 நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கில் காயம் காரணமாக விளையாடவில்லை. இதுகுறித்து முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

அணியில் தொடக்க வீரர்களுக்கு அடுத்து மிகவும் முக்கியமான வீரர் 3வது வரிசை வீரரே. 3வது வீரர் அதிக நேரம் களத்தில் செலவிட்டால்தான் , அடுத்தடுத்து களமிறங்கும் வீரர்கள் அதிக ரன்கள் எடுக்க வசதியாக இருக்கும் .

மேலும்  பந்தை அடித்து அதிக நேரம் களத்தில் அவர் நேரத்தை செலவிடுவதன் மூலம் பந்து ஸ்விங் ஆகும் தன்மையை இழந்து விடும். ஒவ்வொரு அணியிலும் டிராவிட், ரிக்கி பாண்டிங், டான் பிராட்மேன் போன்ற ஜாம்பவான்கள் விளையாடி வந்தனர். இந்திய அணியிலும் புஜாராதான் மூன்றாம் இடத்தில் இருந்தார்.

அந்தவகையில் தற்போது கில் அந்த பொறுப்பிற்கு வந்திருக்கிறார். மூன்றாவது வீரராக களமிறங்கும் நிலையில், காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. இதனால், அவருக்கு பதிலாக சர்பராஸ்கான் கொண்டுவரப்பட்டார்.  ஆனால், சர்பராஸ் மூன்றாவது வீரராக விளையாடவில்லை. விராட் கோலியே விளையாடினார். ஆனால், அவர் டக்கவுட் ஆகி வெளியேறினார்.

இதுகுறித்து முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் பேசியதாவது, “ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தால் வீரர்கள் மகிழ்ச்சியாக விளையாடுகிறார்கள். ஆனால் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால் பேட்ஸ்மேன்களுக்கு கழுத்தில் வலி வந்து விடுகிறது. அது எப்படி நேற்று வரை நன்றாக இருந்த கில்லுக்கு ஆடுகளத்தைப் பார்த்தவுடன் கழுத்தில் வலி ஏற்பட்டு விடுகிறது என்று தெரியவில்லை. கில் கடைசி நேரத்தில் விலகியதால் தான் அணியின் பேலன்ஸ் பாதிக்கப்பட்டுள்ளது.” என்று பேசினார்.

இதையும் படியுங்கள்:
டெஸ்ட் கிரிக்கெட் - இந்த ரிகார்டுகள் மாறுமா?
Subman Gill with Srikanth

முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. சர்பராஸ் கான், விராட் கோலி, கேல்.எல்.ராகுல், ஜடேஜா மற்றும் அஸ்வின் என அனைவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். இதனால், இந்திய அணியின் இந்த ஆட்டத்தைக் குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து நியூசிலாந்து அணி 402 ரன்கள் எடுத்தது. தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com