டெஸ்ட் கிரிக்கெட் - இந்த ரிகார்டுகள் மாறுமா?

Test cricket records
Test cricket
Published on

கிட்ட தட்ட 150 வருடங்களாக ஆடப் பட்டு வரும் கிரிக்கெட் விளையாட்டில் மாற கூடிய ரிகார்டுகள் சிலவற்றை பற்றி ஒரு அலசல்.

இரண்டு ரிகார்டுகள் அப்படியே நிலைத்து நிற்கும்:

ஒன்று டெஸ்டுக்களில் பேட்டிங்கில் சராசரி ரன்கள் - ஸர் டான் ப்ராட்மன் ஏற்படுத்திய சராசரி ரன்கள் (99.94) முறியடிக்க சான்ஸே ஏற்படாது.

அடுத்தது டெஸ்டுக்களில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய சாதனை - முத்தையா முரளீதரனின் 800 விக்கெட்டுக்கள் சாதனையை வீழ்த்தவே முடியாது.

அதற்கான பொதுவான காரணம் என்ன? போட்டி (Competition) அதிகரித்து வருவது தான். அதன் விளைவாக சாதிக்க கூடிய வீரர் தொடர்ந்து டெஸ்டுக்கள் விளையாடுவாரா என்பது கேள்வி குறி. அதிக டெஸ்டுக்கள் விளையாட வேண்டியிருப்பது அத்தியாவசியம் மட்டும் அல்லாமல் காட்டாயமும் ஆகின்றது. மற்ற அணி வீரர்கள் தவிர போட்டியும் (Competition) அச்சுருத்தலும் (Threatening) அணியின் உள்ளே வளர்வதை தவிர்க்க முடியாது. பலதரப் பட்ட கிரிக்கெட் ஆட்டங்கள் விளையாடுவதால் பேட்டிங் அல்லது பவுலிங் டெக்னிக்கில் மாற்றங்களை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளவிட்டால் அவை இடையூர்களாக விஸ்வரூபம் எடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பட்ச ரன்கள் ஆகிய ஸ்ரீலங்காவின் ஸ்கோர் (952) தகர்த்து எரியப்பட்டு ஒரு இன்னிங்சில் 1000 ரன்கள் கடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கிரிக்கெட் ஆட்டம் ஒரு டீம் ஆட்டம் என்பதால் இந்த ரிகார்டு (டெஸ்டில்) ஒரு இன்னிங்சில் 1000 ரன்கள் குவிப்பது சாத்தியம். சமீபத்திய டெஸ்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிதாக இங்கிலாந்து அணி எடுத்த (823) ரன்கள் இத்தகைய சாதனைக்கு ஒரு உதாரணம்.

ஜிம் லேக்கரின் ஒரு டெஸ்டில் எடுக்கப் பட்ட 19 விக்கெடுக்கள் முறி அடிப்பது தற்பொழுதிய சூழ்நிலையில் மிகவும் கடினம்.

டெஸ்ட் சரித்திரத்தின் முதல் மூன்று டெஸ்டுக்களில் வரிசையாக சதங்கள் எடுத்த சாதனையை புரிந்தவர் அசாரூதின். இந்த ரிக்கார்டை முறி அடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. முயன்றால் முடியும்.

இதையும் படியுங்கள்:
சாம்பியன் ஆஸ்திரேலியாவின் கொட்டத்தை அடக்கிய தென் ஆப்பிரிக்கா!
Test cricket records

பிரைன் லாராவின் இரட்டை சாதனை பேட்டிங்கில் இடம் பிடித்துள்ளது முறியடிக்கப் பட மாட்டாது. டெஸ்ட்டின் ஒரு இன்னிங்சில் 400* ரன்கள் மற்றும் முதல் தர ஆட்டத்தின் 501* ரன்கள் சாதனை இனி தனி ஒரே வீரரால் சாதிக்க முடியாது. அதுவும் இரண்டிலும் அவுட் ஆகாமல் நாட் அவுட்டாக. திகழ்ந்தது.

அதிக பட்ச டெஸ்ட் சதங்கள் (51) அதிக பட்ச ரன்கள் (15,921) இரண்டு ரிகார்டுகளும் சசீன் டெண்டுல்கரால் ஏற்படுத்தப்பட்டன. தனி ஒரு வீரரால் எடுக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். முழு ஈடுப்பாடு தேவை. உடன் தன்னம்பிக்கை துணை நிற்க வேண்டும்.

எந்தெந்த டெஸ்ட் ரிகார்டுகள் மாறுதல்களை சந்திக்க போகின்றன என்பதை வரும் கால டெஸ்டுக்கள் பதில் கூறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com