டி20 அணியில் சுப்மன் கில் இருக்கவே கூடாது – ஸ்ரீகாந்த்!

Gill and Srikanth
Gill and Srikanth
Published on

இலங்கைக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் வீரர்கள் தேர்வுதான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக சுப்மன் கில்லை துணை கேப்டனாகப் போட்டது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீரர்கள் தேர்வு குறித்து பல முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கிறிஸ் ஸ்ரீகாந்தும் இதுகுறித்து பேசியுள்ளார். அதாவது, "இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டது அதிர்ச்சியாக உள்ளது. ஏனென்றால் டி20 உலகக்கோப்பையை துணைக்கேப்டனாக இருந்து ஹர்திக் பாண்டியா வென்றுள்ளார்.

இப்போது என்னவென்றால் துணைக் கேப்டன் பதவியில் இருந்தும் ஹர்திக் பாண்டியாவை நீக்கி இருக்கிறார்கள். தேர்வுக் குழுவினரின் இந்த செயல், ஹார்தி பாண்டியாவை அவமரியாதை செய்வதுபோல் உள்ளது. இந்திய அணியின் காம்பினேஷனை பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை கில் அணியிலேயே இருக்கக்கூடாது. அணியிலும் இருக்கக்கூடாது, துணை கேப்டனாகவும் இருக்க கூடாது.

ருதுராஜ் கெய்க்வாட் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். உலகக்கோப்பை தொடரிலேயே சுப்மன் கில் தடுமாறிக் கொண்டிருந்தார். அதேபோல் ஸ்பின்னராக ரவி பிஷ்னாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவர் ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தினார். கில்லுக்கு எதோ நல்ல நேரம் இருக்கிறது. அதேபோல் தேர்வு குழுவினருக்கும் புரிதல் இல்லை என்பது தெரிந்துவிட்டது.

இதையும் படியுங்கள்:
News 5 – (20-07-2024) தொடந்து 2 வது நாளாக மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடக்கம்!
Gill and Srikanth

கில்தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன் என்பதுபோல் செயல்படுகிறார்கள். ஆனால், இன்னும் அந்த திறமை அவருக்கு வரவில்லை. சிவம் துபே மற்றும் ரியான் பராக் எப்படி ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதே புரியவில்லை. ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட வீரர்கள் இன்னும் உழைப்பை கொடுத்து இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டியுள்ளது. சுப்மன் கில்லுக்கு நல்ல ராசி இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.


Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com