மளிகைப் பொருட்களில் மருந்துகள்...

மளிகைப் பொருட்களில் மருந்துகள்...
Published on

ளிகை சாமான்கள் சமைக்க மட்டுமல்ல, மருந்து களாகவும் பயன்படுகின்றன. சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

வெந்நீரில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு குடித்தால் வயிற்று வலி குறையும்.

ழைய சாத நீராகாரத்தில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து பருகி வர, வெயில் காலத்தில் வரும் வயிற்றுக் கடுப்பு, உஷ்ணம் நீங்கிவிடும்.

மத்தை வறுத்து அதனுடன் சிட்டிகை உப்பு, வெல்லம்  கலந்து சாப்பிட்டால் வாய்வு  தொல்லை வராது, உணவும் எளிதில் ஜீரணம் ஆகும்.

வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து, சுடு சாதத்தில் நெய் விட்டு சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு, வயிற்று வலி தீரும்.

நீரை கொதிக்க வைத்து சீரகத்தை போட்டு கசாயம் செய்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம் தணியும்.

விரலி மஞ்சளைப் பொடித்து பாலில் ஒரு ஸ்பூன் பொடி போட்டு, பனங்கற்கண்டு கலந்து, கொதிக்கவிட்டு குடித்தால், வறட்டு இருமல் தீரும்.

சீரகத்தை தேங்காய்ப் பால் விட்டு அரைத்து, வெயில் காலத்தில் வரும் கொப்புளங்களில் தடவினால் சீக்கிரம் ஆறிவிடும்.

மிளகு, துளசி இலவங்கம் இவற்றை அரைத்து பற்களில் தேய்த்து வந்தால் பல் வலி தீரும்.

டுகு எண்ணெயுடன் சிறிது உப்பு சேர்த்து வந்தால், பற்கள் ஆடாமல் உறுதியாக இருக்கும்.

சுக்குப்பொடியை , சாம்பார், புளியோதரை, அடை, போன்றவற்றில் சேர்த்து சாப்பிட, உணவு ஜீரணமாகும். வாய்வுத்  தொல்லை வராது ‌

வாழைப்பழத்தில் சீரகத்தைத் தூவி சாப்பிட மூலநோய் தீரும்.

ருப்புடன் பசலைக் கீரை சேர்த்து கூட்டு செய்து சீரகம் தாளித்து சாப்பிட்டால் பசியை தூண்டும், மலச்சிக்கல் தீரும்.

மத்தை பொடித்து மெல்லிய துணியில் சிறு மூட்டையாக கட்டி, முகர்ந்தால் ஜலதோஷம், மூக்கடைப்பு நீங்கும்.

நான்கு, ஐந்து பாதாம் பருப்புடன் ஆறு, ஏழு மிளகைக் கலந்து மென்று தின்றால், நரம்புத் தளர்ச்சி நோய் தீரும்.

மிளகுத்தூளுடன் சுக்குப்பொடி, பனங்கற்கண்டு, கலந்த பசும்பால் குடித்து வர  தொண்டை வலி காய்ச்சல் தீரும்.

டுகு பசியை தூண்டும். உணவு எளிதில் ஜீரணமாக உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com