#BREAKING ஐபிஎல் 2026: மும்பை இந்தியன்ஸ் இஸ் பேக் - குஜராத்தை வீழ்த்தி அபார வெற்றி..!

அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி வாகை சூடியது.
Mumbai Indians team
Mumbai Indians teamimage credit-outlookindia.com
Updated on

2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெறும் 30-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு ஐபிஎல் போட்டியில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் மும்பை 4-ல் தோல்வியை சந்தித்துள்ளது. அதேசமயம், குஜராத் அணி மூன்றில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் சந்தித்துள்ளது.

இதனால் இப்போட்டியில் குஜராத்தின் வீறுநடையை தடுத்து நிறுத்தி மும்பை வெற்றிப்பாதைக்கு செல்ல தீவிரமாக முயற்சிக்கும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.

அதனை தொடர்ந்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய குஜராத் அணி கடுமையாக போராடிய போதிலும் இறுதியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com