GT Vs MI: குஜராத் அணி வெற்றிக்கு காரணமான இரண்டு தமிழர்கள்!

Gujarath titans
Gujarath titans
Published on

நேற்று அஹமதாபாத்தில் குஜராத் அணிக்கும் மும்பை அணிக்கும் இடையே நடைபெற்ற மோதலில் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாயிருந்தவர்கள் இரண்டு தமிழர்கள் என்பது தமிழக ரசிகர்களுக்கு மாபெரும் பெருமையாக உள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியில் களமிறங்கிய சாகா 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின்னர் களமிறங்கிய கேப்டன் கில் 22 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். கில்லிற்கு பிறகு தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்கினார். அவருடைய ஓவர்களில் மும்பை அணியின் முன்னணி வீரர் பும்ரா வலுவாக பவுலிங் செய்ததால் குஜராத் அணி சற்று தடுமாறியது. இதனால் சாய் சுதர்சன் அடித்து ஆடாமல் பொறுமையாக நின்று 17வது ஓவர் வரை  விளையாடி அணியை முன்னோக்கிக் கொண்டு சென்றார். இந்தநிலையில் சாய் 39 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். இதனால் குஜராத் அணி 168 ரன்கள் என்ற நல்ல ஸ்கோர் வரைச் சென்றது.

அதேபோல் பந்துவீச்சிலும் குஜராத் அணியின் மற்றொரு தமிழக வீரர் சாய் கிஷோர் அபாரமாக பந்துவீசி மும்பை அணிக்கு நெருக்கடி கொடுத்தார். மும்பை அணி பேட்டிங் செய்தபோது இஷான் கிஷன் டக் அவுட் ஆனார். ரோகித் ஷர்மா மற்றும் நமன் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்து வந்தனர். அந்த சமையத்தில் குஜராத் அணி சார்பாக பவுலிங் செய்த சாய் கிஷோர் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை எடுத்து ஒரு மாபெரும் திருப்புமுனையைக் கொடுத்தார்.

இதையும் படியுங்கள்:
ஐபிஎல் 2024: முதல் போட்டியிலேயே பெங்களூருவை புரட்டி எடுத்த சென்னை அணி!
Gujarath titans

ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டிற்குப் பிறகு மும்பை அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தது. இதனால் மும்பை அணி சரிவைக் கண்டது. சாய் கிஷோர் மட்டும் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை எடுக்கவில்லை என்றால் ரோஹித் ஷர்மா தனி ஆளாக நின்று ஆட்டத்தை முடித்து மும்பை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றிருப்பார்.

இவர்களால் தான் குஜராத் அணி வெற்றி பெற்றது. அதேபோல் சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com