ஐபிஎல் 2026: பஞ்சாப் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அதிரடி வெற்றி..!!

ஆமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி பெற்றது.
GT vs PBKS
GT vs PBKSimage credit-crictoday.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

19-வது ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கிறது.

ஆமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சுடன் மோதுகிறது.

குஜராத் அணி 9 ஆட்டங்களில் ஆடி 5-ல் வெற்றி, 4-ல் தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் அணி 8 ஆட்டங்களில் ஆடி 6-ல் வெற்றி, ஒரு முடிவில்லை, 1-ல் தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை சந்தித்ததில் பஞ்சாப் அணி 4-3 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்த 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இறுதியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி நடப்புத் தொடரில் தனது 6-வது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com