GT vs RR: சொந்த மண்ணில் தனது முதல் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் அணி!

GT team
GT team

IPL 2024: நேற்று குஜராத் அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையே ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் பலப்பரீட்சை நடந்தது. இந்தாண்டு IPL தொடரிலேயே நேற்றைய போட்டியில்தான் ராஜஸ்தான் அணி முதல்முறையாக தோல்வி அடைந்தது.

முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியில் ஓப்பனராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 24 ரன்களுடனும், ஜாஸ் பட்லர் 8 ரன்களுடனும் வெளியேறினர். இருவருமே பேட்டிங் செய்ய சிரமப்பட்டதால் பவர் ப்ளே முடிவில் இருவருமே அவுட்டாகி வெளியேறினர். அதன்பிறகு கறமிறங்கிய சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் ஆகியோர் அணியைச் சரிவிலிருந்து மீட்டனர்.

ரியான் பராக் வெறும் 48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டு வெளியேறினர். சஞ்சு 38 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்தவகையில் ராஜஸ்தான் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர் முடிவில் 196 ரன்கள் எடுத்தது.

197 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி தொடக்கத்திலேயே சிறப்பாக விளையாடியது. சாய் சுதர்சன் 35 ரன்களும், சுப்மன் கில் 72 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அதன்பின்னர் களமிறங்கிய மேத்யூ வேட், அபினவ் மனோகர், விஜய் சங்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதால் ராஜஸ்தான் அணியின் வெற்றி விகிதம் கூடிக்கொண்டே சென்றது.

அந்தநிலையில்தான் ராகுல் திவாட்டியா, ஷாருக் கான் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். கடைசி ஐந்து ஓவர்களில் மிகச் சிறப்பாக விளையாடிய குஜராத் அணிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. அந்தநிலையில் ரஷீத் கான் மற்றும் ராகுல் திவாட்டியா ஆகியோர் சிறப்பாக விளையாடி  ஐந்து பாலில் 13 ரன்களை சேர்த்துவிட்டனர். கடைசி பாலில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரஷீத் கான் பவுண்டரி அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார்.

இதையும் படியுங்கள்:
SRH Vs PBKS: 2 ரன்களில் த்ரில் வெற்றிபெற்ற ஹைத்ராபாத் அணி!
GT team

இதன்மூலம் குஜராத் அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதேபோல் இந்த நடப்பு ஐபில் தொடரில் இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று வந்த ராஜஸ்தான் அணி நேற்று முதல் முறையாக தோல்வியை சந்தித்தது. ஆகையால், ராஜஸ்தான் அணி ஐந்து போட்டிகளில் 4 போட்டிகள் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. அதேபோல் குஜராத் அணி ஆறு போட்டிகளில் விளையாடி அதில் மூன்று போட்டிகள் வென்று புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com