ஐபிஎல் 2026: 169 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் திணறல்: குஜராத்திடம் பணிந்தது ஐதராபாத்..!

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்ற 56வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது.
Gujarat Titans team
Gujarat Titans teamimage credit-economictimes.indiatimes.com
Updated on

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் 56வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ்- ஐதராபாத் சன்ரைசஸ் அணிகள் மோதுகின்றன.

குஜராத் அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

ஐதராபாத் அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 4 தோல்வி கண்டு 14 புள்ளிகள் எடுத்து புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறது.

புள்ளிப்பட்டியில் முதலிடத்திற்கு முன்னேற சமபலம் வாய்ந்த ஐதராபாத், குஜராத் அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5 ஆட்டங்களில் குஜராத் அணியும், ஒரு ஆட்டத்தில் ஐதராபாத் அணியும் வென்றுள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய குஜராத் அணி 20 ஒவர் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய ஐதராபாத் அணியால் குஜராத்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் குஜராத் அணி தனது 8-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com