முதுமையின் அறிகுறிகளை முறியடிக்கும் பழக்கங்கள் மற்றும் உணவுகள்!

முதுமையின் அறிகுறிகளை முறியடிக்கும் பழக்கங்கள் மற்றும் உணவுகள்!

ண்மையான அழகு என்பது வயது, பாலினம் மட்டுமல்ல. உடல் தோற்றத்திற்கு அப்பாற்பட்டது. கருணை, இரக்கம், நம்பிக்கை, நம்பகத்தன்மை போன்ற உள்முக குணங்களை உள்ளடக்கியது. புத்திசாலித்தனம், படைப்பாற்றல் மற்றும் நகைச்சுவை உணர்வு போன்ற வெளிப்புற குணங்களையும் கொண்டது. உள் மற்றும் வெளிப்புற குணங்களின் கலவைதான் உண்மையான அழகு என்பதை புரிந்து கொண்டு அவற்றைப் பின்பற்றி நடப்பது என்றும் மனதை இளமையாக வைத்திருக்கும். 

முதுமை என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கடைபிடிப்பதன் மூலம் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும். இளமை தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ளவும் முடியும். முதுமை விரைவாக எட்டிப் பார்க்காமல் நீண்டகாலம் இளமையாக காட்சியளிப்பதற்கு பின்பற்ற வேண்டிய பழக்கங்கள் இதோ:

ருமம் நீரேற்றத்துடனும் மிருதுவாகவும் காட்சியளிக்க நிறைய தண்ணீர் குடிக்கவும்.  நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலமும், நீர்ச்சத்து கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்வதன் மூலமும், உடலில் நீர்ச்சத்தை பராமரிக்க முடியும். அது இளமை பொலிவை தக்க வைக்கும். 

ரவில் ஆழ்ந்த தூக்கத்தை அனுபவியுங்கள். இது உடலை மீள் உருவாக்கம் செய்து இளமையை தக்க வைக்க துணை புரியும். 

தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன், தொப்பி மற்றும் ஆடைகள் பயன்படுத்துங்கள். 

ரெட்டினோல், வைட்டமின் சி மற்றும்  ஹைலூரோனிக் அமிலம் போன்ற வயது முதிர்ச்சியை தடுக்கும் சரும பாதுகாப்பு பொருட்களை பயன்படுத்தவும்.

புகைப்பழக்கம், மதுப்பழக்கத்தை தவிர்க்கவும். இவை முன்கூட்டியே வயதாவதை தடுக்க உதவும். 

ன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். 

டல் எடையை சீராக பராமரிக்கவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். 

ட்கார்ந்துகொண்டே இருப்பதற்கு பதிலாக எந்த உடற்பயிற்சி செய்தாலும் உங்கள் சருமம் இளமையாக இருக்கும். ஏரோபிக்ஸ் போன்ற உடற்பயிற்சிகளை செய்தால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும் இதனால் சருமத்துக்கும், உடலின் அத்தனை உறுப்புகளுக்கும் போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். 

ற்கள் மற்றும் ஈறுகளை பலப்படுத்தி வாய்வழி சுகாதார பிரச்சனைகளை தவிர்த்து விடுங்கள். இதுவும் விரைவில் வயதான தோற்றத்திற்கு வழி வகுக்காது. 

யோகா, தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சி, தோட்டவேலை, குழந்தைகளோடு விளையாடுவது, நடைப்பயிற்சி போன்ற உடலை தளர்வடையச் செய்யும் பயிற்சிகளை மேற்கொள்ளவும். இவை மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் உதவி செய்யும். இதனால் சரும சுருக்கங்களும் காணாமல் போகும். 

ருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதத்தை தக்க வைத்தல், இறந்த செல்களை அப்புறப்படுத்துதல் போன்ற தோல் பராமரிப்பு பழக்கங்களை முறையாக பின்பற்றவும். 

ருமத்தில் சூடான நீரை பயன்படுத்துவதை தவிர்க்கவும். அது சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணைய்களை அகற்றி சரும வறட்சி மற்றும் சுருக்கங்களை ஏற்படுத்தும். 

சருமத்தை எரிச்சலூட்டும், வீக்கத்தை ஏற்படுத்தும் ரசாயன அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதைத்  தவிர்க்கவும். 

தோற்றத்தைப் பாதிக்கக் கூடிய உடல் நலப் பிரச்சனைகளை தொடர்ந்து கண்காணிக்க குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்யும் வழக்கத்தை பின்பற்றவும். 

நீர்ச்சத்து இழப்பை ஏற்படுத்தி சருமத்தை வறட்சியாகவும் முதிர்ச்சியாகவும் ஆக்கிவிடும் காபி, டீ போன்றவற்றை குறைக்க வேண்டும். இதற்கு பதிலாக கிரீன் டீ, ஹெர்பல் டீ குடிக்கலாம். 

உங்கள் சருமம் இளமையாக இருக்க என்னென்ன சத்துக்கள் தேவை என தெரியுமா? 

ருமம்  மினுமினுப்பாக இருக்கவும், வறண்டு சுருங்குவதைத் தடுக்கவும், சரும செல்கள் தங்கள் பாதிப்புகளை சீரமைத்துக் கொள்ளவும் போதுமான கொழுப்பு தேவை. குறிப்பாக ஒமேகா 3 கொழுப்பு அவசியம். அதற்கு ஆளி விதை போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து உண்ணவும். 

ருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் ஏற்படுவதைத் தடுக்க வைட்டமின்  இ தேவை. அதற்கு சூரியகாந்தி விதை சிறந்தது. 

டல் செல்கள் சேதம் அடைவதை தடுத்து இளமை தோற்றத்தை உறுதி செய்கிறது செலினியம். அதற்கு இறைச்சியை உண்ணலாம். 

ருமம் மிருதுவாகவும் எலாஸ்டிக் தன்மையோடும் இருக்க கொலாஜன் தேவை. அவற்றை உற்பத்தி செய்து தருவது வைட்டமின் சி நிறைந்த உணவுகள். நெல்லிக்காய், கிவி போன்றவை. 

ருமம் புத்துணர்வு பெறுவதை ஊக்குவித்து முதுமை தோற்றத்தை தடுக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்தது உருளைக்கிழங்கு, பச்சை இலைக் காய்கள். 

டலின் செல்கள் தங்களை சீரமைத்துக் கொள்ளவும், வளரவும் துத்தநாகம் அவசியம். வெங்காயத்தில் துத்தநாகம் நிறைய உண்டு. 

ருமம் இளமையாக இருக்க மேலே கூறிய சத்துக்கள் நிறைந்த பொருட்களை சாப்பிட்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்து முன் நெற்றியை மிருதுவாக வைத்துக் கொள்ளுங்கள். சுருக்கங்களும் கோடுகளும் இல்லாத மினுமினுப்பான சருமம் பெறலாம்.

இந்தப் பழக்கவழக்கங்களை பின்பற்றி, குறிப்பிட்ட உணவு முறைகளை எடுத்துக் கொண்டால் முதுமையை முறியடித்து, என்றென்றும் இளமையாக தோற்றமளிக்கலாம்! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com