மும்பை அணிக்கு குட்பை சொன்ன ஹர்திக் பாண்டியா! பஞ்சாப் கிங்ஸ் கொடுத்த மெகா ஜாக்பாட் எவ்வளவு தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார் ஹர்திக் பாண்டியா; அர்ஷ்தீப் சிங் மும்பைக்கு இடமாற்றம்.
Hardik Pandya Gesture
Hardik Pandya
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

சமீபத்தில் ஐபிஎல் அணிகளில் வீரர்கள் அதிக ஊதியம் கேட்டு நிர்பந்தித்தது ஏராளமான சர்ச்சைகளை கிளப்பி இருந்தது. அதே நேரம் ஐபிஎல் அணிகள் பல நூறு கோடிகள் லாபம் சம்பாதிக்கும் பொழுது , அதற்குக் காரணமான கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஊதியத்தை அதிகப்படுத்தி கேட்பது ஒன்றும் தவறில்லை என்றும் , அவர்களுக்கு ஆதரவான குரல்களும் எழுந்தது. குறிப்பிட்ட சிலவீரர்கள் அணி மாற உள்ளதாக வதந்திகள் பரவிய நிலையில் தற்போது மும்பை அணியில் இருந்து ஹார்திக் பாண்டியா , அது யார் பூர்வமாக பஞ்சாப் அணிக்கு இடம் பெயர்ந்து உள்ளார்.

2015 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் பாண்டியா , இடையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மாறியிருந்தாலும் , விரைவிலேயே தனது தாய் அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியிருந்தார். நீண்ட காலம் அந்த அணியில் முக்கிய நட்சத்திர விளையாட்டு வீரராக இருந்த பாண்டியா தற்போது வேறு அணிக்கு சென்றது , மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களை கவலைக் குள்ளாக்கியுள்ளது.

தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்துள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு முன்பை விட அதிக ஊதியம் கொடுக்கப்படுகிறது. பாண்டியா பஞ்சாப் அணிக்கு சென்றதால் , இரு அணி நிர்வாகமும் இணைந்து மேற்கொண்ட பரஸ்பர பரிமாற்றத் திட்டத்தின் கீழ் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்த அர்ஷ்தீப் சிங் மும்பை அணிக்கு அனுப்பி உள்ளனர். ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த முடிவு மும்பை இந்தியன்ஸ் அணி பலவீனம் அடைவதில் இருந்து பாதுகாத்துள்ளது.

​தொடக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ₹10 லட்சம் ஊதியத்தில் ஹர்திக் பாண்டியா விளையாட ஆரம்பித்தார். அடுத்த சில வருடங்களில் அவரது ஊதியம் ₹11 கோடியாக உயர்ந்தது. 2022 -23 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கேப்டனாக பாண்டியா பொறுப்பேற்று விளையாடிய போது, அவரது ஊதியம் ₹15 கோடிக்கு உயர்த்தப்பட்டது. அதே ஆண்டு அவர் ஐபிஎல் கோப்பையை வென்று சாதித்தும் காட்டியுள்ளார். பாண்டியா மீண்டும் 2024 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய போதும் அதே ஊதியமே அவருக்கு கிடைத்தது.

Hardik pandya
Hardik pandya

இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியபோது ஹர்திக் பாண்டியா ₹16.35 கோடி ஊதியமாகப் பெற்று வந்தார். ​தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் அவருக்கு ₹18 கோடி சம்பளம் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பாண்டியா இருந்தாலும் , அணி வெற்றிகரமாக செயல்படவில்லை. அந்த அணியும் அவருக்கு ஊதியம் எதிர்பார்த்த அளவில் உயர்த்தி கொடுக்கவில்லை. தற்போது பஞ்சாப் அணிக்கு மாறியதில் அவருக்கு ₹1.65 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது. அதேநேரம் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ₹18 கோடி ஊதியம் பெற்ற அர்ஷ்தீப் சிங்கிற்கு , மும்பை இந்தியன்ஸ் அணியும் அதே ஊதியத்தை வழங்குகிறது.

பாண்டியா சென்றுள்ள பாஞ்சாப் கிங்ஸ் அணி , இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது இல்லை என்ற சோகமான வரலாறும் உண்டு. தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியை வலிமைப்படுத்தும் விதமாக நட்சத்திர வீரராக ஹர்திக் பாண்டியாவை நம்பியுள்ளனர்.