“MI கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் துணிச்சலான முடிவு” - Eon Morgan!

Eon Morgan.
Eon Morgan.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க எடுக்கப்பட்ட முடிவு துணிச்சலானது என்று இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

2024 ஐ.பி.எல். சீசனுக்கு மும்பை இந்தியன் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா தரம் உயர்த்தப்பட்டது அணியின் தலைமை இயக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது. மும்பை இந்தின்ஸின் கேப்டனாக ரோஹித் சர்மாவின் நீண்டகால, வெற்றிகரமான பயணத்திற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவரது தலைமையில் மும்பை இண்டியன்ஸ் 2013 ஆண்டிலிருந்து இதுவரை ஐந்து முறை ஐ.பி.எல். டிராபியை வென்றுள்ளது.

ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியனஸ் அணியின் கேப்டனாக நியமிக்க எடுத்த முடிவில் சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. ரோஹித் சர்மாவின் சாதனை மற்றும் அணியின் வெற்றிக்கான பங்களிப்பை கருத்தில் கொள்ளாமல் அவரை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிப்பது சரியான நடவடிக்கைதானா என பலரும் கேள்வி எழுப்பினர். எனினும் சுநீல் காவஸ்கர் போன்றவர்கள் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிப்பதன் மூலம் அணிக்கு புதிய அணுகுமுறையை கொண்டுவரலாம் என கருத்து தெரிவித்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித்துக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை நியமிப்பது என எடுக்கப்பட்ட முடிவு வெளியான ஒருமணி நேரத்திலேயே லட்சக்கணக்கான பேர் இது பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

எனினும் ரோஹித்துக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவதாக மும்பை இந்தியன்ஸ் வெளியிட்ட அறிவிப்பை மோர்கன் ஆதரித்தார். இந்த முடிவு ஐந்து முறை சாம்பியனான அணிக்கு வலு சேர்க்கும் என்று மோர்கன் தெரிவித்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் எடுத்த துணிச்சலான முடிவை பாராட்ட வேண்டும். ஏனெனில் அனைத்து அணிகளின் உரிமையாளர்களும் இப்படி தைரியமான ஒரு முடிவை எடுக்கமாட்டார்கள் என்றார் மோர்கன்.

இதையும் படியுங்கள்:
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோகிஷ் ஷர்மா விலகுகிறாரா?
Eon Morgan.

அணி உரிமையாளரின் இந்த முடிவு நீண்டகால கண்ணோட்டத்தில், முற்போக்கு சிந்தனையுடன் எடுக்கப்பட்ட முடிவு என்பது தெரியவரும். இதுபோன்ற முடிவு அணியை வலுப்படுத்தும்.

இது ஒரு கடினமான முடிவாகதோன்றலாம். ஆனால், வரும் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மற்றொரு சாம்பியன்ஷிப் பட்டத்தை பெறுவதற்கான வாய்ப்பாக இதைக் கருதலாம். எனவே ஒருவகையில் நீங்கள் எடுத்த முடிவு துணிச்சலானது. எந்த ஒரு அணி உரிமையாளரும் எடுக்காத ஒரு துணிச்சலான முடிவை நீங்கள் எடுத்துள்ளீர்கள். அதற்கு எனது பாராட்டுகள் என்று மோர்கன் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com