ஹார்திக் பாண்டியாவின் பவுலிங் சரியே இல்லை – மோர்னே மோர்கல் அதிருப்தி!

Hardik Pandya
Hardik Pandya
Published on

இந்திய அணியின் முன்னணி வீரரான ஹார்திக் பாண்டியாவின் பவுலிங் சரி இல்லை என்று பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பேசியிருப்பதாக கிரிக்கெட் வட்டாரத்தினர் கூறுகின்றனர் .

இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹார்திக் பாண்டியா பல எதிர்ப்புகளை சந்தித்தார். இதனையடுத்து அவருக்கு விவாகரத்தானது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையிலும் இந்திய அணி டி20 உலகக்கோப்பை வெல்வதில் மிகப்பெரிய பங்கு வகித்தார்.

இந்தநிலையில் இந்திய அணி அடுத்த வங்கதேச அணியை எதிர்த்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் பாண்டியா இடம்பெற்றுள்ளார். முன்னதாக அவர் டி20 அணியின் துணை கேப்டன் பதவியை இழந்திருந்தார். அதற்கு அவரது உடற்தகுதி முக்கிய காரணமாக சுட்டிக் காட்டப்பட்டது.

இவரே அடுத்த டி20 கேப்டன் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், துணை கேப்டன் பதவிக்கூட வழங்காதது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அந்தவகையில் தற்போது ஹார்திக்கின் பந்துவீச்சும் சரியில்லை என்று பவுலிங் பயிற்சியாளர் மோர்னே கூறியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. வலைப் பயிற்சியின்போது இருவருக்கும் இடையே தீவிரமான பேச்சுவார்த்தை நடந்ததாக கிரிக்கெட் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

வலைப்பயிற்சியின் போது மோர்னே மோர்கல் ஹார்திக் பாண்டியாவை உன்னிப்பாக கவனித்து வந்தார். அவர் ஓடி வந்து பந்து வீசும் போது எதிர்முனை ஸ்டம்புக்கு மிக அருகே செல்வதை கவனித்தார். இதனையடுத்து மோர்னே ஹார்திக்கை அழைத்து அதிருப்தி தெரிவித்திருக்கிறார். அது குறித்து அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசினர். பின்னர் ஹர்திக் பாண்டியா தனது பந்துவீச்சு முறையை மாற்றும் முயற்சியில் இறங்கினார்.

இதையும் படியுங்கள்:
பதவி விலகிய பாபர் அசாம்… காரணம் இதுதானா?
Hardik Pandya

அங்கு நடந்ததை வைத்தே மோர்னே சொன்னதையும் ஹார்திக்கின் மாற்றத்தையும் கவனிக்க முடிந்ததாக கிரிக்கெட் வட்டாரத்தினர் விவாதிக்கின்றனர்.

தற்போது  இந்திய டி20 அணியில் மயங்க் யாதவ், ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். மேலும் சிவம் துபே மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக உள்ளனர். ஹார்திக் பாண்டியாவுக்கு போட்டி அதிகமாகி வருவது மட்டும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com