ஐபிஎல் போட்டியில் தோனி தனது வசதிக்கேற்ப தானே எப்போது வேண்டுமென்றாலும் பேட்டிங் செய்கிறார் என்று பிளம்மிங் பேசியிருக்கிறார்.
சென்னை அணியின் அடையாளம் என்றால், அது தோனிதான். தோனிக்கு வயதாகி வருவதால், எந்த நேரமும் ஓய்வை அறிவிக்கலாம் என்ற நிலை இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், கடந்த சில ஆண்டுகளாகவே ஓய்வு குறித்தான ரூமர்ஸ் வந்துக்கொண்டுதான் இருக்கின்றன. இப்படியான சமயத்தில்தான் சென்ற ஆண்டு ஐபிஎல் தொடரில் தன்னுடைய கேப்டன் பதவியை ருதுராஜுக்கு கொடுத்துவிட்டார். அதுமுதல் அவருக்கு பல விஷயங்களை கற்றுத்தந்து வருகிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் அன்கேப்புடு ப்ளேயராக வாங்கப்பட்டார். தனது சம்பளத்தை பெரிய விஷயமாக கருதாமல், முழுதும் ரசிகர்களுக்காகவே விளையாடி வருகிறார்.
சென்னை அணி விளையாடும்போதெல்லாம், தோனி கடைசி 4 ஓவர்களிலேயே களம் இறங்க விரும்புகிறார். அதற்கு முன் இருக்கும் ஓவர்களில் அணியின் வேறு வீரர்களை விளையாட வைக்கிறார். இதனால், விமர்சனங்கள் எழுந்தன.
இதுகுறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் பிளம்மிங், “முழங்கால் பிரச்சனை காரணமாக தோனியால் ஒன்பது அல்லது பத்து ஓவர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியாது. அணியின் சூழ்நிலைக்கேற்ப அவரது பேட்டிங் வரிசையை அவரே முடிவு செய்து கொள்கிறார். அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், பயிற்சியாளரான தன்னையும் தாண்டி தோனி தனது பேட்டிங் வரிசையை தானே முடிவு செய்து கொள்வார்.” என்று சொல்லியிருந்தார்.
எது எப்படியிருந்தாலும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதால் தோனியின் செயல் வரவேற்க தக்கதாக இருக்கிறது. அப்படி இருந்தாலும், ரசிகர்கள் பலரும் பலதரபட்ட கருத்துக்களை கூறிதான் வருகின்றனர்.
அதாவது கடந்த 2011ம் ஆண்டு பிறகு சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக் மற்றும் கௌதம் கம்பீர் ஆகிய மூவரில் இருவருக்கு தான் பிளேயிங் லெவனில் இடம் அளிக்க முடியும், ஏனெனில், அவர்கள் மெதுவாக ஃபீல்டிங் செய்கிறார்கள் என்று கூறியிருந்தார் கேப்டன் தோனி. அவர்களுக்கு வயதாகிவிட்டது என்றுதானே தோனி அப்படி செய்தார், இப்போது இவருக்கே வயதாகிவிட்டதே. அப்போ ஓய்வெடுக்கலாமே...
என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.