ஒலிம்பிக் தொடரின் ஓட்டப்பந்தயத்தில் மிகப்பெரிய சாதனைப் படைத்த நோவா லைல்ஸ் உலகின் வேகமான வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில், 100மீ ஓட்டப்பந்தயத்திற்கான போட்டியில் நோவா லைல்ஸ் உட்பட கிஷேன் தாம்சன், அமெரிக்காவின் கென்னத் பெட்னரெக், ஃப்ரெட் கெர்லி, தென்னாப்பிரிக்காவின் அகானி சிம்பைன், இமைக்காவின் செவில், போட்ஸ்வானாவின் டிபோகோ மற்றும் இத்தாலியின் ஜாகப்ஸ் ஆகியோர் போட்டிப்போட்டனர்.
ஆனால், நோவா களமிறங்கும்போது எதோ அவர் வெற்றிபெற்றது போல கொண்டாட்டங்கள் இருந்தன. துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் அனைவரும் ஓடத் தொடங்கினர். நோவா லைல்ஸ் முதல் 30 மீட்டர் வரை 8வது இடத்தில் தான் இருந்தார். ஜமைக்காவின் தாம்சன் முன்னிலையில் இருந்தார்.
ஆனால் 50 மீ தூரம் கடந்த பின் நோவா லைல்ஸ் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தினார். கடைசியாக நோவா, தாம்சன் மற்றும் கெர்லி ஆகியோர் ஒரே நேரத்தில் இலக்கை அடைந்தனர். இதனால், யார் வெற்றிபெற்றார் என்ற குழப்பம் நீடித்தது. ஆகையால், மீண்டும் ரீசெக் செய்தனர். அப்போது அமெரிக்காவின் நோவா லைல்ஸ்-க்கு தங்கப்பதக்கம் உறுதியானது தெரியவந்தது. 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 9.79 நொடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். 100 மீ ஓட்டப்பந்தயத்தில் உலக சாம்பியன் பட்டமும் இவர்தான் வென்றார்.
வெள்ளிப் பதக்கத்தை ஜமைக்கா வீரர் கிஷன் தாம்சனும், வெண்கலப் பதக்கத்தை அமெரிக்காவின் பிரெட் கர்லியும் வென்றனர். கடந்த 100 மீட்டர் ஒலிம்பிக் சாம்பியனான இத்தாலியின் மார்செல் ஜேக்கப்ஸ், இம்முறை ஐந்தாவது இடத்தை பெற்றுக்கொண்டார்.
போட்டி தொடங்குவதற்கு முன்னர், நோவா தான்தான் உலகின் வேகமாக மனிதன் என்று சொன்னார். இதனை பலர் ஏற்றுக்கொண்டாலும், சிலர் தற்பெருமை, வீண் பேச்சு என்றெல்லாம் கூறினார்கள். ஆனால், தற்போது தான் சொன்ன வார்த்தைகளை உண்மையாக்கியிருக்கிறார் நோவா. இதன்மூலம் உலக மக்கள் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார் நோவா.