"ஒருபோதும் கைவிடாதவர்" - கே.எல்.ராகுலை பாராட்டிய அதியா ஷெட்டி!

KL Rahul
KL Rahul
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2024 தொடரின் முதல் டெஸ்டின் போது, தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் பார்ட்னர்ஷிப்பில் 201 ரன்களின் ஆட்டமிழக்காமல் புதிய சாதனை படைத்தனர். கே.எல்.ராகுலின் மனைவியும் நடிகையுமான அதியா ஷெட்டி தனது கணவரின் சாதனையைக் கொண்டாடும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் பதிவிட்டுள்ளார். அதில், "ஒருபோதும் விட்டுக்கொடுக்காதவர். ஒருபோதும் பின்வாங்காதவர்" என்று கே.எல் ராகுலை பாராட்டி உள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில், தம்பதியினர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தனர். "எங்கள் அழகான ஆசீர்வாதம் விரைவில் வரும். " என்று அவர்கள் எழுதினர், அதனுடன் சிறிய கால்களின் படம் மற்றும் ஒரு தீய கண் ஈமோஜியும் இருந்தது.

தமிழ் சினிமாவில் 12பி, தர்பார் ஆகிய படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் தான் பாலிவுட் நடிகையான அதியா ஷெட்டி. இவர், ஹீரோ, முபாரகான், மோட்டிஜோர் சக்னாஜோர், நவாப்ஷாடே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

KL ராகுலும், அதியா ஷெட்டியும் 2019-ல் ஒரு பரஸ்பர நண்பர் மூலம் முதன்முதலில் சந்தித்தனர். அவர்களின் உறவு காலப்போக்கில் மலர்ந்து, 2023-ல் அவர்களின் திருமணத்திற்கு வழிவகுத்தது. சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் நடந்த இவர்களது திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான், ஜாக்கி ஷெராஃப், அக்‌ஷய் குமார், எம் எஸ் தோனி, விராட் கோலி  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்:
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியாவின் டாப் 5 இமாலய டெஸ்ட் வெற்றிகள்!
KL Rahul

18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. சவுதி அரேபியாவில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் கே.எல்.ராகுல் டெல்லி அணிக்கு ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன் லக்னோ அணியின் கேப்டனாக பதவி வகித்தார் கே.எல்.ராகுல் என்பது குறிப்பிடத்தக்கது.