இந்திய பயிற்சியாளராக இவர்தான் வந்திருக்க வேண்டும்… குறுக்கு வழியில் வந்தார் கம்பீர் – பாகிஸ்தான் வீரர்!

Gautam Gambhir
Gautam Gambhir
Published on

கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து இந்திய கிரிக்கெட் வட்டாரத்தினர் மற்றும் ரசிகர்கள் பெரிதும் இதனை வரவேற்கின்றனர். ஆனால், பாகிஸ்தான் வீரர் ஒருவர் தற்போது, கம்பீர் குறுக்கு வழியில் பயிற்சியாளரானார் என்றும், அந்த பதவியில் வேறு கிரிக்கெட் வீரர் ஒருவரே வந்திருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

கௌதம் கம்பீர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். சுமார் இரண்டு முறை, இவர் தலைமையிலான அணி வெற்றிபெற்றது. இதனால், இவரின் பயிற்சிக்கு மிகவும் வரவேற்பு கிடைத்தது. இந்திய அணியின் கேப்டனாக இருந்து சில கோப்பைகளையும் வென்று கொடுத்திருக்கிறார்.

இவரின் திறமை மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த இந்திய ரசிகர்கள், இவர் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டவுடன் பெரிய வரவேற்பு கொடுத்தனர்.

ஆனால், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தன்வீர், கம்பீருக்கு எதிராக பேசியுள்ளார். அதாவது, இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளராக லட்சுமணன் தான் பதவி ஏற்றிருக்க வேண்டும். ஏனென்றால் லட்சுமணன் இந்திய பி அணிக்கு பலமுறை பயிற்சியாளராக வந்து தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் லட்சுமணன் இருந்து, அடுத்த பயிற்சியாளராக தன்னை மெருகேற்றிக் கொண்டிருந்தார். ஆனால் கம்பீர் தமக்கு இருக்கும் அரசியல் தொடர்புகளை வைத்து பயிற்சியாளராக வந்து அமர்ந்து விட்டார்.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு!
Gautam Gambhir

லட்சுமணன் கிட்டத்தட்ட 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பணியை செய்து வர ஆர்வம் காட்டி வருகிறார். இவரே அடுத்த பயிற்சியாளர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போதுகூட கம்பீர் ஓய்வுபெறும் போட்டிகளில் இவரே பயிற்சியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், கம்பீர் எப்படி வந்தாலும், இந்திய அணிக்கு தேவையானவர் என்றே இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தான் வீரருக்கு பதில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com