உலகக்கோப்பை 2024: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய 8 அணிகளின் லிஸ்ட் இதோ!

T20 Teams
T20 Teams

நடப்பு ஆண்டு நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் அடுத்த சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய 8 அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

உலக கிரிக்கெட் ரசிகர்களின் தற்போதைய ஒரே எதிர்பார்ப்பு, அந்த உலகக்கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது என்பதுதான். டி20 உலகக்கோப்பை போட்டி ஜூன் 2ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இருபது அணிகள், நான்கு குரூப்களாகப் பிரிந்து மோதி வருகின்றன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் இருக்கின்றன.

குரூப் சி பிரிவில் நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான், உகான்டா, பாபுவா நியூ கினியா ஆகிய அணிகள் உள்ளன. குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபால் ஆகிய அணிகள் உள்ளன. அரையிறுதி போட்டிகள் ஜூன் 26, 27 ஆகிய தேதிகளிலும், இறுதி போட்டி 29ம் தேதியிலும் நடைபெறவுள்ளன.

முதலாவதாக இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் வெளியேறின.

ஒவ்வொரு குரூப்களில் உள்ள ஐந்து அணிகள் தங்களுக்குள்ளேயே மோதும். அதில் வெற்றி தோல்விகளை கணக்கு வைத்து குரூப்பிற்குள்ளேயே ஐந்து அணிகள் பட்டியலிடப்படும். அந்தப் பட்டியலில் முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் அணிகளே அடுத்த சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறும். ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள முதல் இரண்டு அணிகள் என மொத்தம் 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும். சூப்பர் 8 சுற்றில் நான்கு குரூப்கள் இரண்டு குரூப்களாக குறைக்கப்படும். அந்தவகையில் தற்போது தகுதிபெற்ற அணிகளைப் பார்ப்போம்.

குரூப் 1:

ஆஃப்கானிஸ்தான்

ஆஸ்திரேலியா

வங்கதேசம்

இந்தியா

இதையும் படியுங்கள்:
டி20 தொடரிலிருந்து வெளியேறிய அணி… மழையால் வந்த சோதனை!
T20 Teams

குரூப் 2:

இங்கிலாந்து

தென்னாப்பிரிக்கா

அமெரிக்கா

மேற்கு இந்தியத் தீவுகள்

இந்த ஒவ்வொரு குரூப்களில் இருக்கும் நான்கு அணிகள் தங்களுக்குள் மோதும். அதன்பிறகு வெற்றி தோல்விகளைப் பொறுத்து பட்டியலிடப்படும். இரண்டு குரூப்களிலும் இருக்கும் முதல் இரண்டு அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com