டி20 தொடரிலிருந்து வெளியேறிய அணி… மழையால் வந்த சோதனை!

T20 Worldcup
T20 Worldcup

20 அணிகள் மோதும் டி20 தொடரிலிருந்து மூன்றாவது அணியாக தற்போது ஒரு அணி வெளியேறியுள்ளது. இது அந்தநாட்டு ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

டி20 உலகக்கோப்பை போட்டி ஜூன் 2ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இருபது அணிகள், நான்கு குரூப்களாகப் பிரிந்து மோதி வருகிறது. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதேபோல் இன்னும் மூன்று குரூப்கள் உள்ளன. லீக் சுற்றின் முடிவில் இந்த ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களில் உள்ள அணிகளே அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இந்தநிலையில்தான் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் 30வது லீக் போட்டியில் அமெரிக்கா அணியை எதிர்த்து ஐயர்லாந்து அணி விளையாட இருந்தது.

ஆனால், ப்ளோரிடோ மைதானம் அமைந்துள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஃபுளோரிடோவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் மதியத்திற்கு பின் ஓரளவுக்கு மழை குறைந்து, வெயில் அடிக்கத் தொடங்கியது.

இதனால், போட்டி எந்தத் தடையும் இன்றி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மைதானம் முழுமையாக தார்பாய் வைத்து மூடப்படவில்லை. இதனால் மைதானத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. இதனால் திட்டமிட்டபடி 8 மணிக்கு டாஸ் போட முடியவில்லை.

அதன்பின் 9 மணிக்கும், பின்னர் 10 மணிக்கும், அதன்பின் 10.45 மணிக்கு நடுவர்கள் மீண்டும் மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். இறுதியாக 11 மணியளவில் மழை பெய்ய தொடங்கிய நிலையில், ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து போட்டியில்லாமல், அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்காவின் லக், மற்றொரு அணிக்கு அன்லக்காக அமைந்தது. ஆம்! அது பாகிஸ்தான் அணிதான்.

அந்தவகையில் பாகிஸ்தான் அணி தான் விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று இரண்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்தது. அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் பிற அணிகளின் வெற்றி, தோல்விகள் அந்த அணிக்கு சாதகமாக அமைய வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது.

இதையும் படியுங்கள்:
இந்திய அணி விளையாடிய மைதானம் தகர்ப்பு… அமெரிக்கா இப்படி செய்ய காரணம் என்ன?
T20 Worldcup

தற்போது போட்டியே இல்லாமல், பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.  ஏற்கனவே இலங்கை, நியூசிலாந்து அணிகள் வெளியேறியுள்ள நிலையில், அந்த வரிசையில் பாகிஸ்தானும் இணைந்துள்ளது. இதன் மூலமாக அசோசியேட் அணிகள் 7வது முறையாக டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பின் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com