
Pakistan vs India: 2025 ஆம் ஆண்டிற்கான ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அடிக்கடி போர் நடைபெறுவது ஒரு சகஜமான விஷயமாக இருக்கிறது. மற்ற நாட்டு போர்களை விட இந்தியா பாகிஸ்தான் இடையே நடக்கும் போர்களில் மக்கள் உணர்ச்சிவசமாக இருப்பார்கள். எதிரி நாடாக இருந்தாலும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடைபெறும் எந்த விளையாட்டும் அதிக முக்கியத்துவம் பெறுவதும் இல்லை. ஆனால் இந்தியா பாகிஸ்தான் இடையில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒரு போர் போலவே பார்க்கப்படுகிறது.
அதிலும் கிரிக்கெட் போட்டிகள் உச்சபட்ச பரபரப்பை ஏற்படுத்துகின்றன. காரணம் கிரிக்கெட் போட்டிகளில் ரசிகர்களாக இரண்டு நாட்டு பிரதமர்களும் கலந்து கொள்வதாலும் நாட்டின் பெரும்பாலான மக்களும் ரசிகர்களாக இருப்பதால் அப்படி ஒரு உச்சகட்டத்தை அடைகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட் போட்டிகளை பிரபலப்படுத்த முயற்சி செய்யும்போது அங்கு இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தான் நடத்தப்பட்டது.
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளின் வரலாறு (History of Pakistan vs India cricket rivalry)
1947 ஆம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகாரப்பூர்வமாக பிரிந்ததற்கு பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உருவானது. இந்திய கிரிக்கெட் அணி விடுதலைக்கு முன்னரே உருவானது இந்தியர்கள் கிரிக்கெட் விளையாட்டில் பங்குபெற ரஞ்சித்சிங், துலிப்சிங் போன்ற ராஜாக்கள் அடித்தளம் அமைத்தனர். அதன் பின் இந்திய கிரிக்கெட் அணியை 1911ஆம் ஆண்டு ராஜா பூபிந்தர் சிங் உருவாக்கினார்.1932 ஆம் ஆண்டு இந்திய அணி தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடியது.
இந்திய அணியின் பரிந்துரையின் பேரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 1952 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தானின் முதல் டெஸ்ட் போட்டியும் முதல் சர்வதேசப் போட்டியும் இந்தியாவுக்கு எதிராக தான் அறிமுகமானது.
Best moments from Pakistan vs India matches (பாகிஸ்தான் vs இந்தியா போட்டிகளின் சிறந்த தருணங்கள்)
1952 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்தது. இந்தியா பாகிஸ்தான் முதல் போர் முடிந்து நடந்த விளையாட்டு என்பதால் அப்போதே மிகவும் பரபரப்பாக இருந்தது. லக்னோவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற இந்திய ரசிகர்கள் ரகளையில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய இந்திய அணி மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
அதன் பின்னர் இந்திய அணி 1955 மற்றும் 1961 இல் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது , ஆனால் , இரு தொடர்களின் அனைத்து ஆட்டங்களும் டிரா ஆனது.அதன் பின்னர் 1961 மற்றும் 1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது.இதனால் நீண்ட காலம் இரண்டு அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்தது. 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போர் பின்னணியில் சில ஆண்டுகள் இரு நாடுகளுக்கு இடையிலான போட்டிகள் நிறுத்தப்பட்டன.
1978 ஆம் ஆண்டு மற்றும் 2003 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் துவங்கப்பட்டது. 1990 களில் இருந்து இந்தியா கிரிக்கட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயங்கியது.பின்னர் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் சமாதான முயற்சியினால் இந்திய அணி 2006 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது.
சென்னையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் சயீத் அன்வர் 194 ரன்கள் எடுத்தது, நீண்ட காலம் ஒரு தனிநபர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.1999 ஆம் ஆண்டு , அனில் கும்ப்ளே பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே இன்னிங்ஸ்சில் 10 விக்கெட்டுகள் எடுத்தது இன்று வரை உலக சாதனையாக உள்ளது.
இரு நாடுகள் இடையே ஆதிக்கம்:
இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டிகளில் பாகிஸ்தானின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. ஆயினும் சமீபத்திய 2 தசாப்த காலத்தில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற 59 டெஸ்ட் போட்டிகளில் ,பாகிஸ்தான் 12 போட்டிகளிலும் இந்தியா 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றது , 38 போட்டிகள் டிரா ஆனது. இரு நாடுகளும் மொத்தம் 136 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன, இதில் பாகிஸ்தான் அணி 73 போட்டிகளிலும் இந்திய அணி 58 போட்டிகளிலும் வெற்றி பெற்றது, 5 போட்டிகளுக்கு முடிவு இல்லை.
டி 20 போட்டிகளில் ஒரு அணிகளும் 14 போட்டிகளில் விளையாடி அதில் 10 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது ,3 போட்டிகளில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளது, ஒரு போட்டியில் முடிவு காணப்படவில்லை. உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தானை வென்றுள்ளது.சர்வதேச கிரிக்கெட் தர வரிசையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியா நம்பர் 1 அணியாக உள்ளது.பாகிஸ்தான் தரவரிசையில் இந்தியாவை நெருங்க முடியாத தூரத்தில் உள்ளது.
இந்தியாவின் சச்சின், ராகுல் டிராவிட் போன்றவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார். அதே போல பாகிஸ்தானின் சயித் அன்வர் , சோயப் அக்தர் , இன்சமாம் உல் ஹக் போன்றோர் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார்கள்.
வளர்ச்சி:
கிரிக்கெட் வளர்ச்சியை பொறுத்த வரையில் இந்தியா விஸ்வரூப வெற்றி பெற்றுள்ளது.இந்திய சர்வதேச கிரிக்கட் வாரியமான (ICC) க்கு படியளக்கும் தெய்வமாக இந்திய கிரிக்கெட் போர்ட் உள்ளது. கிரிக்கெட் உலகில் 90% வருமானம் இந்திய கிரிக்கெட் போர்ட்டில் இருந்து பெறப்படுகிறது. இந்தியா கிரிக்கெட் உலகின் முதல் பணக்கார அணியாகவும் உள்ளது. மாறாக பாகிஸ்தான் அணி மிகவும் வறுமையிலும் கிரிக்கெட் வாரியம் பந்து வாங்கவே சிரமத்தில் இருக்கிறது.