துயிலுவது எப்படி?

துயிலுவது எப்படி?

“கவிழ்ந்து படுத்துத் தூங்க வேண்டாம்” என்ற பொது வாக்யத்தின் பின்னால் நிறைய மருத்துவ ரீதியாகச் செய்திகள் உள்ளன. நம் உடம்பில் இடப்பக்கத்திலும் வலப் பக்கத்திலும் இரு முக்கியமான நாடிகள் உள்ளன. இதை இடை, பிங்கலை என்று ஸம்ஸ்க்ருதத்திலும் கூறுவோம். இதை எளிதாக சூர்ய, சந்திர நாடி எனவும் சொல்லலாம். ஏனென்றால் இடது பக்கம் உள்ள சந்திர நாடி, உடம்பில் குளிர்ச்சியையும், வலது பக்கம் உள்ள சூர்ய நாடி உஷ்ணத்தையும் பெருக்கும். அதாவது வலது பக்க மூக்கு துவாரத்தால் சுவாசிக்கும்போது உடம்பில் வெப்பமும், இடது பக்க மூக்கு துவாரத்தால் சுவாசிக்கும்போது குளிர்ச்சியும் உடலில் உண்டாகிறது.

இதை நன்கு அறிந்த நம் முன்னோர்கள் காலை எழுந்ததும் காற்றோட்டமான பகுதியில் அமர்ந்து இந்த மூச்சு விடும் பயிற்சி அல்லது ப்ரணாயாமம் செய்து வந்தார்கள். சந்தியாவந்தனம் காலை மாலை செய்பவர்கள் தன்னிச்சையாகவே இதைச் செய்து விடுகிறார்கள். மற்றவர்கள் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

காற்றும், தண்ணீராலும்தான் உலகில் வியாதி பெருகிறது என்று அன்றே கண்டதால்தான் யக்ஞங்களை வளர்த்து, அக்னிஹோத்ரம் தினமும் செய்து, காற்றை மாசுப்படுத்தும் நச்சப் பொருட்களை அழிக்க ஏற்பாடுகள் செய்தனர்! எல்லாவற்றையும் ஆக்குவதும், அழிப்பதும் பங்ச பூதங்களே எனப் பெயரிட்டு அதையே கடவுளர்களாக வாயு, வருணன், அக்னி பகவான் எனப் பெயரிட்டு வழிபட்டனர். இதே “அண்டகத்திலுள்ளதுதான் பிண்டத்திலும்” என்பதை நமக்கு வலியுறுத்தவே இத்தனை பயிற்சிகளையும் சூர்ய நமஸ்காரம், ப்ரணாயாமம், யோகா, நம் அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்கும் வழக்கமாக்கி வைத்திருந்தனர்.

பொதுவாகவே இரு பக்கமும் மூச்சை இழுத்து விடுவது பல சின்னச் சின்ன உடல் தொந்திரவுகளை போக்கடித்து விடும்.

துயலுவது எப்படி?

நீங்கள் கழவிந்து படுக்கும்போது மூச்சை அடைத்துக் கொள்கிறீர்கள்.

மல்லாந்து படுக்கும்போதும், பெண்கள் இடப்பக்கமும், ஆண்கள் வலப்பக்கமும் படுத்திருக்கும்போதும் காற்றின் (சுவாச) ஓட்டம் சீராக அமைய வாய்ப்பு உள்ளது.  ஆனால் நம்மிடம் உள்ள பெரிய குறை, நம்மில் பலர் இழுத்து மூச்சு விடுவதில்லை. மேலோட்டமாக அதாவது Shallow breathing தான் செய்கிறோம். இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உண்டாக்கி, ரத்த ஓட்டம், மற்ற உறுப்புகளின் செயல்திறன் முதலியன பாதிக்கப்படுகிறது.

உங்கள் மூச்சு சரியாக உள்ளதா என எளிய பரிசோதனை செய்து பாருங்கள். ஒரு பலூனை வாங்கி ஊதுங்கள். நீங்கள் எளிதில் பலூனை ஊதி நிரப்பி விட்டால் உங்களுக்கு “நோ ப்ராப்ளம்”. அப்படி பலூனை ஊதவே முடியாமல் மிகத் திண்டாடினீர்கள் என்றால் தம் பிடிப்பதும், மூச்சு விடுவதும் சரளமாக இல்லை என்பது புரிகிறது. அதனால், மூச்சுப் பயிற்சி செய்யுங்கள் அல்லது பலூன் ஊதி பழகுங்கள்!

அடுத்த தடவை நீங்கள் படுக்கும் முன் இங்கே கூறியவற்றை மல்லாந்து படுத்தே யோசியுங்கள். 12 முறை ஆழ்ந்து மூச்சு எடுத்து விடுங்கள். 13ம் முறை கொட்டாவியுடன் தூக்கம் கண்களைத் தழுவிக் கொள்ளும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com