"தக்க பதிலடி கொடுக்காமல் எனக்கு ஓய்வில்லை" – தோனி!

MS Dhoni
MS Dhoni

கடைசி ப்ளே ஆஃப் சுற்றில் பெங்களூரு அணி மற்றும் சென்னை அணி மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றிபெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இதனையடுத்து தோனி அதற்கு தக்க பதிலடி கொடுக்காமல் எனக்கு ஓய்வு இல்லை என்று கூறியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இரண்டு முன்னணி அணிகள், பெங்களூரு மற்றும் சென்னை அணிகளாகும். அந்தவகையில் கடந்த  மே 18ம் தேதி சென்னை அணி, பெங்களூரு அணியிடம் படுதோல்வியடைந்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைப் பறிக்கொடுத்தது. இந்தப் போட்டி முடிந்தவுடனே பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. பெங்களூரு அணி வெற்றிபெற்றதும், தோனி கைக்குழுக்காமல் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றார். விராட் கோலி அவரைத் தேடி ரூமிற்கே சென்று தனியாக பேசியுள்ளார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

அதேபோல் மைதானத்திலேயே பெங்களூரு அணி ரசிகர்களின் அடாவடி கட்டுப்பாட்டை இழந்து சென்றதாகக் கூறப்படுகிறது. சென்னை அணி வீரர்கள் பேருந்தில் ஏறும்போது பெங்களூரு ரசிகர்கள் விடாமல் கூக்குரல் எழுப்பியதாகவும், பெங்களூரு ஜெர்ஸியை தூக்கிக் காட்டி கிண்டல் செய்ததாகவும் கூறப்பட்டது. அதேபோல் சென்னை அணி ரசிகர்களையும் அவர்கள் தொடர்ந்து வெறுப்பேற்றினார்கள்.

இதனை தோனி மற்றும் பிற சென்னை அணி வீரர்கள் பொருமையாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். இதனையடுத்து தற்போது, “பெங்களூரு அணி ரசிகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து, சென்னை அணி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவேன். அவர்களை தலைகுனிய விடமாட்டேன். இதற்கு பதிலடி கொடுத்துவிட்டும், சென்னை அணி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துவிட்டும்தான் ஓய்வு பெறுவேன்.” என்று சபதம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
“இப்படித்தான் மன அழுத்தத்திலிருந்து வெளிவருவேன்” – எம்.எஸ்.தோனி!
MS Dhoni

இதனால், அவர் அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஒரு அணியை மற்றோரு அணி கிண்டல் செய்வது எல்லாம் வழக்கம்தான். அது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்று. அப்படியிருக்க, தோனியின் இந்த சபதம் விளையாட்டிற்காகவும் இருக்கலாம் என்றே கணிக்கப்படுகிறது.

அதேபோல், பெங்களூரு அணி நேற்றைய எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், க்வாலிஃபையர் 2ம் சுற்றிற்கு ராஜஸ்தான் அணி முன்னேறியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com