“இப்படித்தான் மன அழுத்தத்திலிருந்து வெளிவருவேன்” – எம்.எஸ்.தோனி!

 MS Dhoni
MS Dhoni

எம்.எஸ்.தோனி கிரிக்கெட் போட்டிகளில் ஏற்படும் அவரது மன அழுத்தம் குறித்தும், அதிலிருந்து வெளியே வரும் வழிகள் குறித்தும் ஒரு யூட்யூப் சேனலில் பேசியுள்ளார்.

பொதுவாக அனைத்துத் துறைகளிலுமே மன அழுத்தம் இருக்கத்தான் செய்யும். அதனைக் கையாளும் விதம் அறிந்தாலே, மன அழுத்தத்திலிருந்து எளிதில் விடுப்படலாம். ஆனால், சிலர் அந்த வழி அறியாமல்தான் மூச்சுக் கூட விட முடியாமல் தவிக்கிறார்கள். அந்தவகையில், நடப்பு ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை, எம்.எஸ்.தோனி பல உடல் ரீதியான பிரச்சனைகளையும் மன ரீதியான பிரச்சனைகளையும் சந்தித்தார் என்று கூறினால் ஆச்சர்யத்திற்கில்லை. ஏனெனில், ஒரு பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் வெளியில் காண்பித்துக் கொள்ளாத ஒரு விஷயம் மன அழுத்தம்.

அந்தவகையில், தோனி தனது மன அழுத்தத்தை எப்படி சமாளிப்பார் என்பது குறித்துதான் அந்தப் பேட்டியில் பேசியுள்ளார்.

இதுகுறித்து தோனி பேசுகையில், "நான் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகிய பின் என் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட விரும்பினேன். அதே சமயம் மனதளவிலும் சுறுசுறுப்பாக இருக்கவும் விரும்பினேன். என் மனதில் எப்போதும் ஒரு உத்வேகம் இருக்க வேண்டும் என நான் நினைத்தேன்.

எனக்கு விவசாயம் செய்ய மிகவும் பிடிக்கும். மேலும், மோட்டார் பைக்குகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். பாரம்பரியமிக்க கார்களை சேகரிக்கத் தொடங்கினேன். இது போன்ற விஷயங்கள் என்னை மன அழுத்தத்தில் இருந்து வெளியே கொண்டு வரும். நான் மன அழுத்தத்திற்கு உள்ளானால் எனது மோட்டார் பைக்குகள் மற்றும் கார்களை நிறுத்தி வைத்திருக்கும் கேரேஜ்க்கு செல்வேன். அங்கு சில மணி நேரத்தை செலவிடுவேன். அப்போது என் மனம் அழுத்தத்திலிருந்து வெளிவரும். அதன் பின் மீண்டும் வீட்டுக்கு வந்து விடுவேன்.

இதையும் படியுங்கள்:
“நான் மனிதனே அல்ல…” – பிரதமர் மோதி!
 MS Dhoni

நான் சிறு வயதில் செல்லப்பிராணிகளுடன் வளர்ந்தேன். எனக்கு நாய்களை மிகவும் பிடிக்கும். அவை நம் மீது அளவு கடந்த அன்பை செலுத்தும். நான் இதற்கு முன்பும் ஒரு பேட்டியில் இது பற்றி கூறி இருக்கிறேன். நான் ஒரு போட்டியில் தோல்வி அடைந்து வீட்டுக்கு வந்தாலும், என் நாய் அதே மாறாத அன்புடன் என்னை வரவேற்கும்." என்றார்.

இவ்வாறு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கும். அவையே உங்களை மன அழுத்தத்திலிருந்து வெளியே கொண்டுவரும் கருவிகள் என்பதை இதன் மூலம் நாம் அறிந்துக்கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com