இவரின் கிரிக்கெட் மூளையை நான் மதிக்கிறேன்: ஆஸ்திரேலிய வீரர்!

Ashwin - Khawaja
Ind vs Aus
Published on

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் வருகின்ற நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஒருவரை ஆஸ்திரேலிய வீரர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். யார் அந்த சுழற்பந்து வீச்சாளர் என்பதை இப்போது தெரிந்து கொள்வோமா!

இந்தியா பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் ரசித்துப் பார்ப்பார்கள். அதற்கேற்ப களத்திலும் அனல் பறக்கும். இதற்கு அடுத்ததாக இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் மோதும் போட்டிகள் சுவாரஸ்யமாக இருக்கும். அதிக ஐசிசி கோப்பைகளை தன்வசம் வைத்திருக்கும் ஒரு அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்றால் எவ்வளவு பெரிய விஷயம். விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் அணி முதன் முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. அதற்கு அடுத்ததாக அஜிங்கியா ரஹானே தலைமையில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா. இப்படி தொடர்ச்சியாக இரண்டு முறை தொடரை இழந்ததன் காரணத்தால் இம்முறை வெற்றியைப் பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர் ஆஸ்திரேலிய வீரர்கள்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடப்பாண்டு இறுதியில் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் தொடங்கவுள்ளது. இந்தத் தொடரை நிச்சயமாக ஆஸ்திரேலியா வெல்லும் என அந்நாட்டு முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்ய இந்திய அணியும் தயாராகி வருகிறது. ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி போன்ற வேகப்பந்து வீச்சாளர்களின் எழுச்சி தான் வெளிநாட்டுத் தொடர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது. இருப்பினும் சுழற்பந்து வீச்சாளர்களும் தங்களது பங்களிப்பைத் தொடர்ந்து அளித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை பாராட்டியுள்ளார் ஆஸ்திரேலியாவின் ஓபனிங் பேட்டர் உஸ்மான் கவாஜா.

இதுகுறித்து உஸ்மான் கவாஜா மேலும் கூறுகையில், “இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் போட்டிகள் எப்போதுமே சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். கடந்த இரண்டு முறை சொந்த மண்ணில் தோல்வியைத் சந்தித்து இருந்தாலும், இம்முறை ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோம். நிச்சயமாக இந்தியாவுக்கு எதிரான தொடரை நாங்கள் வெல்வோம். இந்திய அணியைப் பொறுத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர். எப்போதும் ஒரு வியூகத்துடன் களத்திற்கு வந்து, அதனை செயல்படுத்தும் திறன் கொண்டவர்.

இதையும் படியுங்கள்:
இளம் கிரிக்கெட் வீரர்களை எச்சரிக்கும் அஸ்வின்!
Ashwin - Khawaja
Ashwin vs Khawaja
Ashwin

ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு திட்டத்துடன் களத்தில் இறங்குவார். எதிரணி வீரர்களுக்கு எதிராக எந்த வியூகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். அவருடைய இந்த கிரிக்கெட் மூளையை நான் மிகவும் மதிக்கிறேன். அஸ்வினுக்கு எதிராக நான் எப்போது விளையாடினாலும், அது மிகவும் அருமையாக இருக்கும். நடப்பாண்டில் அவருக்கு எதிராக விளையாடி ரன் குவிக்கும் சவாலுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான். இதுதவிர 500-க்கும் மேல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையும் படைத்துள்ளார். இவருடைய இந்த விக்கெட் வேட்கை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com