அஸ்வின் உலகின் சிறந்த வீரராக வருவார் என்று நினைத்தேன்! - பயிற்சியாளர்!

Ravichandra Aswin
Ravichandra Aswin
Published on

சிறுவயதிலேயே அஸ்வின் உலகின் மிகப்பெரிய வீரராக வலம் வருவார் என்று கணித்தேன் என்று அஸ்வின் பயிற்சியாளர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்தியா வங்கதேசம் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அஸ்வின் பல பெருமைகளைப் பெற்றுள்ளார். சிறந்த பந்துவீச்சாளராக இருக்கும் அஸ்வின் கும்பளேக்கு பிறகு அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக இருந்து வருகிறார். தற்போது பேட்டிங்கிலும் கலக்கி வரும் அஸ்வின், அதிக முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வார்னேவின் ரெக்கார்ட்டை சமன் செய்திருக்கிறார்.

இந்தநிலையில் அஸ்வினின் பயிற்சியாளர் சுப்பிரமணியம் பேசியதைப் பார்ப்போம். “தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமி அடுத்த தலைமுறைக்கான சுழற்பந்துவீச்சாளரை தேர்ந்தெடுத்தபோதுதான் அஸ்வினைப் பார்த்தேன். அஸ்வின் அப்போதே மிக உயரமாக இருந்ததால், அவர் போடும் பந்து நன்றாக பவுன்ஸ் ஆனது மற்றும் பந்து நன்றாகத் திரும்பியது.

இவையே அவருக்கு ப்ளஸாக அமைந்தன. அப்போதே நான் நினைத்தேன். இவர் வருங்காலத்தில் சிறந்த சுழற்பந்துவீச்சாளராக வருவார் என்று நினைத்தேன். அதேபோல், அஸ்வினுக்கு கிரிக்கெட்மீது மிகச்சிறந்த அறிவு இருக்கிறது. மற்ற வீரர்கள் போல் அல்லாது,  புதிதாக யோசிக்கக்கூடியவராக இருந்தார். என்ன செய்தால் என்ன நடக்கும் என்ற அறிவு அதிகமாகவே இருந்தது. நான் அப்போதே இவர் ஆல் டைம் சிறந்த கிரிக்கெட் வீரராக வருவார் என்று கணித்தேன். அஸ்வினுக்கு பந்துவீச்சு மட்டுமல்ல பேட்டிங்கும் சிறப்பாக வரும். விவிஎஸ் லக்ஷ்மன் போல் பேட்டிங் செய்யும் திறன் அஸ்வினுக்கு இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
Chess Olympiad: இந்தியா வென்ற கோப்பையை காணவில்லை!
Ravichandra Aswin

நான் அவரிடம் பேட்டிங்கை விடாதே என்று கூறுவேன். ஆனால், அவருக்கு பந்துவீச்சே பிடிக்கும். அதேபோல், ஃபீல்டரை எங்கு நிறுத்த வேண்டும் என்ற விஷயமும் நன்றாக அவருக்குத் தெரியும். நான் பயிற்சியாளராக இருக்கும்போது என்னிடம் சந்தேகம் கேட்டே என்னைத் தொலைத்துவிடுவார். நான் சில விஷயத்தை கூறினால் அதனை ஒப்புக்கொள்ள மாட்டார். கிரிக்கெட் தொடர்பான சிறிய நுணுக்கங்கள் கூட தெரிய வேண்டும் என்பதில் அஸ்வின் தெளிவாக இருந்தார். அஸ்வின் பல ஐடியாக்களை கூறுவார்.

என்ன செய்தால் பலன் கிடைக்கும் என்பது அஸ்வினுக்கு நன்றாகவே தெரியும். அவருக்கு முட்டாள்தனமான ஐடியாக்கள் கொஞ்சம் கூட பிடிக்காது. நான் சில கருத்துக்களை கூறினால், அது அவருக்கு செட் ஆகவில்லை என்றால் வேண்டாம் என்று மறுத்து விடுவார். நான் எனக்குத் தெரிந்த வழியில் செய்து விடுகிறேன் என்று கூறிவிடுவார்.” என்று அஸ்வின் குறித்து அவரது பயிற்சியாளர் பேசியுள்ளார்.


 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com