"வினேஷ் போகத் இறந்துவிடுவாரோ என்று பயந்தேன்" – பயிற்சியாளர் வோலர்!

Vinesh Phogat
Vinesh Phogat
Published on

வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை குறித்து அவரது பயிற்சியாளர் வோலர் பேசியுள்ளார்.

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இதில் 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மல்யுத்தத்தின் 50 கிலோ பிரிவில் கலந்துக்கொண்ட வினேஷ் போராடி ஒரே நாளில் மூன்று போட்டியாளர்களுடன் மோதி வெற்றிபெற்று வெற்றி வாகை சூடினார்.

ஆனால், அடுத்த நாளே அவருடைய எடை 50 கிராம் அதிகமானதாக கூறி போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன், அந்த பதக்கம் யாருக்கும் வழங்கப்பட மாட்டாது என்று ஒலிம்பிக் நிர்வாகம் கூறிவிட்டது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்ததோடு, விளையாட்டு விதிகளையும் நினைவுப்படுத்தினர்.

அதேபோல் சர்வதேச விளையாட்டு வீரர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் விதி இதுதான் என்று சொல்லி தகுதி நீக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையே வினேஷ் தனது 50 கிராம் எடையை குறைக்க ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல், நீர்ச்சத்து குறைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மனமுடைந்துப் போன வினேஷ் தனது ஓய்வையும் அறிவித்தார்.

இந்தநிலையில் வினேஷ் போகத்தின் பயிற்சியாளர் வோலர் அகோஸ் பேசுகையில், “எடை குறைப்புக்காக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் விடிய விடிய மேற்கொண்ட பயிற்சிகளால் அவர், உயிரிழந்துவிடுவாரோ என்று பயந்தேன். வினேஷ் என்னிடம் பேசிய போது, நீங்கள் வருத்தப்பட வேண்டாம். நான் உலகின் சிறந்த வீராங்கனையை (ஜப்பானின் யுகி சுசாகி) தோற்கடித்து உள்ளேன்.

இதையும் படியுங்கள்:
ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி!
Vinesh Phogat

நான் எனது இலக்கை அடைந்துவிட்டேன். உலகின் சிறந்த வீராங்கனைகளில் நானும் ஒருவர் என்பதை நிரூபித்துள்ளேன். பதக்கம், பதக்க மேடை எல்லாம் வெறும் பொருட்கள்தான். செயல் திறனை யாராலும் பறிக்க முடியாது.” என்று பேசினார்.

உண்மையில் வினேஷ் போகத், தனது வாழ்க்கையில் நிறைய கடினமான சூழல்களை சந்தித்திருக்கிறார். ஒருவேளை அந்த சூழ்நிலைகள்தான் வினேஷ் போகத்திற்கு இவ்வளவு மனோ திடத்தை அளித்திருக்குமோ என்னவோ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com