“தொடர்ந்து போராடுவேன்” – தோல்வியை சந்தித்த மும்பை அணி கேப்டன் ஹார்திக் பாண்டியா!

Hardik Pandya
Hardik Pandya

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்த மும்பை அணி கேப்டன் ஹார்திக் பாண்டியா, “போர்க்களத்தை விட்டு வெளியேற மாட்டேன். தொடர்ந்து போராடுவேன்.” என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி  விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.  இதுவரை 51 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.  இதில் 10 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேபோல் சென்னை அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது.

ஐந்து முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய மும்பை அணியின் கேப்டன், இந்தமுறை மாற்றப்பட்டார். ரோஹித் ஷர்மாவின் கேப்டன் பதவி, ஹார்திக் பாண்டியாவிற்கு கொடுக்கப்பட்டது. இதனையடுத்து மும்பை ரசிகர்கள் இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதேபோல், மும்பை அணியின் ஆட்டமும் சுமாராகத்தான் இருந்தது. ஆனால், அதற்கு கேப்டன்ஸி மாற்றம் என்ற ஒரே காரணத்தை மட்டும் முதன்மையாக சொல்லிவிட முடியாது.

அந்தவகையில், நேற்று கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில், கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதனையடுத்து மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பேட்டி அளித்தார். அதில் அவர் பேசியதாவது, “இந்தப் போட்டியில் எங்களது பேட்டிங் இன்னிங்ஸில் நாங்கள் முறையான பார்ட்னர்ஷிப்பை அமைக்கத் தவறினோம்.  தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம்.  டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை என்றால் அதற்கான பலனை பெற வேண்டி இருக்கும்.

பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.  முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு விக்கெட் கொஞ்சம் நன்றாக இருந்தது.  தொடர்ந்து போராடுங்கள்.  அதைத்தான் நான் எனக்கு சொல்லிக் கொள்கிறேன்.  போர்க்களத்தை விட்டு வெளியேறாதீர்கள்.  கடினமான நாட்கள் வரும்.  ஆனால், நல்லதும் வரும்.  இது சவாலானதுதான். ஆனால், அந்த சவால் உங்களை சிறந்ததாக்கும்” என்றார்.

இதையும் படியுங்கள்:
(ஒரே பெயர் கொண்ட) இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களின் இரட்டை சதங்கள்!
Hardik Pandya

இதுவரை 11 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி, அதில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. இதனால், மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் பெங்களூரு அணி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com