யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் நான் மட்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தால், விராட் கோலிக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் ஓய்வே கொடுக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா உடனான தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது. அப்போதே பிசிசிஐ ரோஹித் ஷர்மாவை வார்ன் செய்தது. இதனையடுத்து வரும் சாம்பியன்ஷிப் ட்ராபியில் இந்திய அணியை வெற்றிபெற வைத்தால் மட்டுமே ரோஹித் ஷர்மாவால் இந்திய அணியில் தொடர முடியும் என்ற நிலை வந்தது. இதுவே ரோஹித் ஷர்மாவுக்கு பிசிசிஐ அளித்த கடைசி வாய்ப்பு.
இந்த ஒரே வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இந்திய அணியை சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையில் வெற்றியடைய வைத்தார் ரோஹித் ஷர்மா.
ஆனால், இந்திய அணியில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததற்கு கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் மீதுதான் விமர்சனங்கள் எழுந்தன.
இதுகுறித்து யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் பேசுகையில், “என்னை மட்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமித்தால் நான் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை ஒருபோதும் இந்திய அணியில் இருந்து நீக்க மாட்டேன். அவர்களை வைத்து இந்தியாவை தோற்கடிக்க முடியாத ஒரு அணியாக உருவாக்குவேன்.
அவர்களுடைய திறமையை யாருமே வெளியே கொண்டு வர நினைக்கவில்லை, சரியாக விளையாடவில்லை என்றால், அணியை விட்டு வெளியேற்றவே நினைக்கிறார்கள். அவர்கள் கடினமான சூழலை கடந்து செல்லும் நிலையில் நான் உங்களிடம் இருக்கிறேன் என்று அந்த குழந்தைகளிடம் கூற விரும்புகிறேன்.
அவர்களை ரஞ்சி ட்ராபியில் தொடர்ந்து விளையாட கூறுவேன். அதோடு ரோஹித் ஷர்மாவை 20 கிலோமீட்டர் தூரம் ஓட வைப்பேன். இதை யாரும் செய்யாமல் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்கிறார்கள். நான் அவர்களின் தந்தை போன்று இருப்பேன்.
அதேபோல் அவர்கள் செய்வது தவறு என்றால், தவறு என்று வெளிப்படையாக கூறுவேன்.” என்று பேசினார்.
திடீரென்று இவர் வீரர்களுக்கு சப்போர்ட் செய்து பேசியது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.