இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தற்போது டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில்லை ஊக்கப்படுத்தும் வகையில் அழைத்துப்பேசியிருப்பது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சுப்மன் கில் குறுகியகாலகட்டத்திலேயே தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்கள். அவர் தற்போது இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் முக்கிய ஆட்டக்காரராக இருப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், சுப்மன் கில் திடீரென டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அணியில் சுப்மன் கில்லின் வெற்றிடம் உணரப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தற்போது டெங்கு நோயில் இருந்து குணமடைந்துள்ள சுப்மன் கில், அகமதாபாத்தில் பயிற்சில் ஈடுப்பட்டத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் உடன் முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரும், புற்றுநோயில் இருந்து மீண்டவருமான யுவராஜ் சிங் சமீபத்தில் பேசியுள்ள்ர்.
அதைப்பற்றி பேட்டி ஒன்றில் பேசிய யுவராஜ் சிங்,”நானும் புற்றுநோயில் இருந்தபோதுதான் உலககோப்பை விளையாடினேன். அப்போது ஒரு வீரரின் நிலை எப்படி இருக்கும் என நன்கு அறிவேன். அதை கேட்ட அவர் அணியில் சேரத் தயாராகிவிட்டார். பாகிஸ்தானை எதிர்க்கும் போட்டியில் களமிறங்குவாரா என்ற எதிர்ப்பார்ப்பில் தான் நானும் காத்திருக்கிறேன் . கில்லை படுக்கையிலிருந்து எழ வைத்துவிட்டேன் “ என்று கூறினார்.
இடதுகை பேட்ஸ்மேனான யுவராஜ் 2000ம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமாகி 17 வருடம் இந்திய அணிக்காக விளையாடினார். இவருக்கு இதுவரை இரண்டு முறை டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டிருக்கிறது. 2009 மற்றும் 2010 ம் ஆண்டு சதம் கொடுக்காத இவரை ரசிகர்கள் இவர் அவ்வளவுத்தான் என்று நினைத்தனர். ஆனால் 2011ம் ஆண்டு நடந்த உலககோப்பையில் களமிறங்கினார் யுவராஜ் சிங். உலககோப்பை ஆரம்பிக்கும் முன்னர் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்திய அணி விளையாடியது.
அதில் இவரும் களமிறங்கிய நிலையில் ஆட்டத்தின் போதும் இரவு நேரங்களிலும் மிகவும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதை அணி கேப்டன் சச்சினிடம் கூறலாம் என்றிருக்கும்போது சச்சின் உலககோப்பையில் வெற்றிபெறுவதைப் பற்றி வெறியோடு பேசிக்கொண்டிருந்தார். அன்று எதுவும் கூறாமல் உலககோப்பையில் களமிறங்கினார் யுவராஜ்.
அந்த தொடரில் சென்னையில் நடந்த வெஸ்ட் இண்டிஸிற்கு எதிரான போட்டியில் சதம் நெருங்கிக் கொண்டிருந்தது . ஆனால் ஓவ்வொரு இடைவெளியிலும் அவரை காணவில்லை. நடுவர் சென்று அவரைப் பார்த்ததில் ஒவ்வொரு இடைவெளியிலும் சென்று ரத்த வாந்தி எடுத்துக்கொண்டிருந்தார் யுவராஜ் சிங். நடுவர் அவரை ”என்னை ஆம்புலன்ஸ் வண்டியில் எற்றிவிடுங்கள் “ என்று கூறிவிட்டு சென்றார், ஆனால், நடுவரை திரும்பி அவரைப் பார்த்த யுவராஜ் சிங்” நான் சதம் அடிக்க வேண்டும் யாரிடமும் இதை பற்றி கூறாதீர்கள் ”என்று கூறிவிட்டு களத்திற்கு சென்றார். போட்டி முடிந்த பின்னர் மருத்தவமனைக்கு சென்று பரிசோதித்து பார்த்ததில் தான் தெரிந்தது. யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்று. அதன்பிறகு எவ்வளவு கஷ்டங்களுக்கு இடையிலும் 2017 ம் ஆண்டு வரை இந்தியாவிற்காக விளையாடினார் யுவராஜ்.