இந்திய மண்ணில் சச்சின் சாதணையை முறியடித்த டேவிட் வார்னர்...எப்படி தெரியுமா?

David Warner
David Warner

ருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் எடுத்து சாதணை படைத்த லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளிய ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்.

ஐசிசி உலககோப்பை தொடரில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஆஸ்திரேலியா அணி நெதர்லாந்து அணியை எதிர்த்து விளையாடியது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை தோல்வியடைய செய்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி ஐந்து போட்டிகளில் மூன்று போட்டிகள் வெற்றி பெற்று ஆறு புள்ளிகளுடன் புள்ளிப்படியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

நேற்று நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா அணி ஓப்பனராக டேவிட் வார்னர் களமிறங்கினார். தொடக்கம் முதலாகவே அதிரடியாக விளையாடி வந்த வார்னர் 93 பந்துகளில் 11 பவுண்டரிஸ் 3 சிக்ஸர்கள் என 104 ரன்கள் அடித்தார்.

ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பை தொடரில் இதுவரை டேவிட் வார்னர் 23 இன்னிங்ஸில் ஆறு சதங்கள் அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 44 இன்னிங்ஸில் ஆறு சதங்கள் அடித்திருக்கிறார். சச்சினுக்கு இணையாக வார்னர் ஆறு சதங்கள் அடித்திருந்தாலும் இன்னிங்ஸ் கணக்கின்படி வார்னர் சச்சினை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார்.

இலங்கை வீரர் குமார் சங்ககாரா 35 இன்னிங்ஸில் ஐந்து சதங்கள் அடித்து நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார். அதேபோல் ஆஸ்திரேலியா வீரர் ரிக்கி பாண்டிங் 42 இன்னிங்ஸில் ஐந்து சதங்கள் அடித்து ஐந்தாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
டேவிட் வார்னர், மாக்ஸ்வெல் அதிரடி சதம்! ஆஸ்திரேலியாவிடம் சுருண்டது நெதர்லாந்து!
David Warner

மேலும் உலககோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த பட்டியலில் முதல் இடத்தில் இந்திய வீரர் ரோஹித் ஷர்மா இருக்கிறார். ரோஹித் ஷர்மா 22 இன்னிங்ஸில் 7 சதங்கள் அடித்து அசைக்க முடியாத ஒரு பேட்ஸ்மேனாக இருக்கிறார். உலககோப்பையின் 13 வது லீகின் இந்த தொடரில் மீதம் உள்ள போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வீரர் வார்னர் சதம் அடித்தால் ரோஹித் ஷர்மா சாதணையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com