ICC Men's T20 World Cup (2024) - ஷிவம் தும்பே சரியான தேர்வா? சுப்மன் கில், ரிங்கு சிங் நீக்கப்பட்டது ஏன்?

Shivam Dube-Shubman Gill-Rinku Singh
Shivam Dube-Shubman Gill-Rinku Singh

- மது வந்தி

2024 ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றியுடன் முடிவடைந்த நிலையில், மக்களின் மனநிலை மாறுபட்டுள்ளதைக் காணமுடிகிறது. மக்கள் அவவர் விருப்பப்பட்ட அணியின் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொண்ட விதத்திலும் , எதிர் அணியின் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொண்ட விதத்திலும் எந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் மிகப் பெரிய வித்தியாசத்தை உணர முடிந்தது. நண்பர்கள் என நினைத்த அணிகள் எதிரிகளைப் போல் மோதிக் கொண்டதையும் பார்க்க முடிந்தது.

எது எப்படியோ, இந்தியா என வரும்பொழுது மக்கள் தங்களின் விருப்பு வெறுப்பை மறந்து ஒன்று சேர்வது சந்தோஷத்தை தருகிறது. அப்படி நாம் அனைவரும் இப்பொழுது ஒன்றாக நின்று எதிர்பார்க்கும் உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டிகள் அடுத்த வாரம் துவங்க உள்ளன.

இன்றைய காலகட்டத்தில் எல்லாமே வேகமாக நடைபெறவேண்டும் என நினைக்கும் மக்களின் மனதை கவர துவங்கப்பட்டது தான் இந்த இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள். ஒரு அணி மட்டுமே மூன்று மணிநேரம் விளையாடியது போய் இரு அணிகளும் சேர்ந்து மூன்று மணிநேரத்தில் முடிக்கும் போட்டிகள் தான் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள். இது ஐசிசி எனப்படும் இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில்லால் 2007 முதல் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு உலகக்கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. ஜூன் இரண்டாம் தேதி தொடங்கும் போட்டியில் மொத்தம் நடக்கும் 55 போட்டிகளில் இந்திய அணி நான்கு போட்டிகளில் விளையாடுகிறது.

இதில் முதல் போட்டியில் அயர்லாந்துடன் மோதுகிறது. மற்ற மூன்று போட்டிகளும் முறையே பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் கனடா அணிகளுக்கு எதிரே உள்ளது. முதலில் நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்திய அணி.

இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் கடந்த இருபத்தி நான்காம் தேதி வெளியிடப்பட்டது.

வீரர்களின் பட்டியல் இதோ: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா (வைஸ் கேப்டன்) , ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷதீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

இதையும் படியுங்கள்:
டி20 தொடரில் புதிய விதி… இந்தியாவின் லக் இதுலேயே தெரிஞ்சுருச்சேப்பா!
Shivam Dube-Shubman Gill-Rinku Singh

சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹமது, ஆவேஷ் கான் ஆகியோர் இருப்பு வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அணியின் தேர்வைக் குறித்து நிருபர்களுடனான கலந்துரையாடலின் பொழுது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல நிலையில் ஆடுவதாகவும் நடுவரிசையில் தான் கவனம் செலுத்த வேண்டும் என்பதால், ஷிவம் துபே அதற்குச் சரியாக இருப்பார் என்றும் அவரின் செயல் திறமை ஐபிஎல் தொடரிலும் அதற்கு முன்பாகவும் சிறப்பாக இருந்ததால் அவரை தேர்வு செய்ததாகவும் கூறினார்.

சுப்மன் கில், ரிங்கு சிங் ஆகியோர் விளையாடும் அணியில் இல்லாததைப் பற்றிக் கேட்டதற்கு, இந்திய அணியின் பிசிசிஐ மூத்த ஆண்கள் அணி தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், ஒரு அணியில் மொத்தம் பதினைந்து வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதாலும் தேர்வு செய்த மற்ற வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடுவதால் இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை எனவும் அணியில் மாற்றம் தேவைப்பட்டால் செய்யப்படும் எனவும் கூறினார்.

ரிங்கு சிங்கிடம் கேட்டதற்கு அணியில் தேர்வு செய்யாதது முதலில் ஏமாற்றமாக இருந்ததாகவும் அணியின் கேப்டனிடம் பேசியபொழுது உன் உழைப்பில் கவனம் செலுத்து வாய்ப்புகள் பிற்காலத்தில் வரும் எனக் கூறியதாகவும் தெரிவித்தார். அதேபோல் அணியின் நலனைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்ட எந்த முடிவும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று ரிங்கு சிங்க் கூறினார்.

2013யில் எம்.எஸ்.தோனி தலைமையில் இந்திய அணி ஜெயித்த சாம்பியன்ஸ் ட்ரோபியே கடைசியாக நாம் ஜெயித்த ஐசிசி கோப்பையாகும். அதன் பிறகு 13 வருடங்களாக நம்மால் ஒரு ஐசிசி கோப்பையை கூட ஜெயிக்க முடியவில்லை. இந்த ஆதங்கம் இந்திய அணியின் ஒவ்வொரு ரசிகனுக்கும் உள்ளது. இந்த வருடமாவது இந்த ஆதங்கம் தணிக்கப்படுமா? இந்திய அணி கோப்பையை ஜெயிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com