வீடுகளுக்கு சிலிண்டர் போட்ட ரிங்கு சிங்.. இன்று இந்தியாவின் Best Finisherஆக உருவானது எப்படி?

Rinku Singh
Rinku Singh
Published on

ரோஹித், விராட் கோலி என முக்கியமான முன்னணி வீரர்கள் இடம்பெறாத நிலையில், இந்தியாவில் நடைபெற்றுவரும் டி20 உலககோப்பை போட்டியில் நாடு முழுவதும் உச்சரிக்கும் பெயராக மாறியுள்ளார் ரிங்கு சிங். யார் இவர் வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

இந்திய வீரர் ரிங்கு சிங் உத்தரப்பிரதேஷ மாநிலத்தில் அக்டோபர் 12 1997ம் ஆண்டு பிறந்தார். மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர் இவர். இவருடைய அப்பா சிலிண்டர் வியாபாரம் செய்யும் பணியை செய்து வந்தார். ரிங்கு சிங் வளர்ந்தபிறகு கிடைத்த வேலைகள் எல்லாம் செய்து வந்தார்.

குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக சில காலம் துப்புறவு பணியாளராகவும் இருந்தார். ரிங்குவின் பெற்றோர் இவரை கிரிக்கெட் விளையாடக்கூடாது என்று கூறினார்கள். ரிங்கு மாலையில் அப்பாவின் சிலிண்டர் வியாபாரம் செய்யவும் உதவி செய்து வந்தார். அதனால் ரிங்குவின் அப்பா வேலையில்லாத சமயங்களில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கொடுத்தார்.

Rinku singh Parents
Rinku singh Parents

இதையடுத்துதான் ரிங்கு தனது நான்கு சகோதரர்களின் உதவியுடன் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். அவருடைய பெற்றோர் ஆதரவு இல்லையென்றாலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். ஒருமுறை ஒரு போட்டியில் வெற்றிபெற்று மிதிவண்டி பரிசாகப் பெற்று தன் தந்தையிடம் கொடுத்தார்.

அதுவரை வாடகை மிதிவண்டியில் சிலிண்டர் வியாபாரம் செய்த அவர் அப்பாவுக்கு இது மிகவும் உதவியாக இருந்தது. பின்னர் அவர் பெற்றோர்களும் ரிங்கு கிரிக்கெட் விளையாட ஆதரவு கொடுக்க ஆரம்பித்தனர். அவரின் தொடர் முயற்சியால் 2014ம் ஆண்டு 16 வயதுக்குட்பட்டவருக்கான போட்டியில் தனது அறிமுக ஆட்டத்தை ஆடினார். தனது முதல் ஆட்டத்திலேயே 83 ரன்கள் எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அதன்பிறகு 2017ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரிங்கு சிங்கை பஞ்சாப் அணி ஏலத்தில் வாங்கியது. அடுத்த ஆண்டு கொல்கத்தா அணி 80 லட்சம் கொடுத்து வாங்கியது. இந்நிலையில் அபுதாபியில் நடைபெற்ற டி20 தொடர் ஒன்றில் ரிங்கு பிசிசிஐ அனுமதியில்லாமல் விளையாடினார்.

பிசிசிஐ விசாரணை நடத்தியதில் ரிங்கு சிங் விதிமுறை தெரியாமல் விளையாடியதாக கூறினார்.இதனையடுத்து ரிங்கு சிங்குவிற்கு கிரிக்கெட் விளையாட 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. பிறகு 2021ம் ஆண்டு காயம் காரணமாக ரிங்கு சிங் விளையாடவில்லை. 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 23 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் ஆனார். இதன்முலம் அணியின் முக்கிய வீரராக உருவெடுத்தார்.

2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக விளையாடிய கொல்கத்தா அணிக்கு 5 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டது. அதாவது ஐந்து பந்துகளிலுமே சிக்ஸர்கள் அடித்தால்தான் ராஜஸ்தான் அணி வெற்றிபெரும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் ரிங்கு சிங் கடைசி ஐந்து பந்துகளிலும் ஐந்து சிக்ஸ்ர்கள் அடித்து பெஸ்ட் பினிஷர் என்ற பட்டத்தைப் பெற்றார்.

இதன்மூலம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐயர்லாந்திற்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு அறிமுகமானார். பின்னர் இப்போது இந்தியாவில் நடைபெறும் ஆஸ்திரேலியா இந்தியா டி20 தொடரில் விளையாடி வருகிறார்.

இதையும் படியுங்கள்:
டி-20: கெத்து காட்டிய ஜெய்ஸ்வால்!
Rinku Singh

இதன் முதல் ஆட்டத்தில் இந்திய அணி தடுமாறி வந்தது. கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டும் என்றிருந்த நிலையில் ரிங்கு சிங் சிக்ஸர் அடித்து இந்திய அணியை காப்பாற்றினார்.

மேலும் நேற்று நடைபெற்ற போட்டியில் வெறும் 9 பந்துகளில் 31 ரன்கள் அடித்து இந்திய அணியின் இளம் தூனாக மாறிவருகிறார். இவர் சதம் அடித்தோ அரைசதம் அடித்தோ அணியை காப்பாற்றுவதை விட, அணி தடுமாறும் போதெல்லாம் ஒரு பெஸ்ட் பினிஷராக இருந்து அணியை காப்பாற்றி வருகிறார்.இதுவே இவரின் சிறப்பு அம்சமும் கூட.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com