டி20 உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போது தெரியுமா?

T20 World Cup: India-Pakistan.
T20 World Cup: India-Pakistan.
Published on

டி20 உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. 2007 ஆம் ஆண்டு தொடக்கப் போட்டியில் பட்டம் வென்ற இந்திய அணி குரூப் ஏ பிரிவில் பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து, அமெரிக்கா, கனடா அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

உலகக் கோப்பைக்கான டி20 போட்டி வருகிற ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் யு.எஸ்.ஏ. அணி, கனடா அணியை எதிர்கொள்கிறது.

ஏ பிரிவில் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் தொடக்கப்போட்டியில் இந்தியா, அயர்லாந்துடன் மோதுகிறது. இந்தப் போட்டியுடன் இந்தியா தனது டி20 பயணத்தைத் தொடங்குகிறது.

எனினும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பரபரப்பான ஆட்டம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியும் நியூயார்க் நகரில் கட்டப்பட்டுள்ள தாற்காலிக மைதானத்தில்தான் நடைபெறுகிறது. கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு இந்த போட்டி மறக்கமுடியாத போட்டியாக இருக்கும்.

வரவிருக்கும் டி20 கிரிக்கெட் உலக கோப்பை  போட்டியில் பங்குபெறும் அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணிகள் சூப்பர் எட்டு கட்டத்திற்கு முன்னேறும். இதையடுத்து வெற்றிபெறும் அணிகள் ஜூன் 30 இல் நடைபெறும் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

குழு பிரிவுக்கான போட்டிகளில் இந்தியா முதலில் அயர்லாந்தை ஜூன் 5 இல் சந்திக்கிறது. அடுத்து பாகிஸ்தானை ஜூன் 9 ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளும் அமெரிக்காவில் நியூயார்க்கில் நடைபெறும். இந்தியா, யு.எஸ்.ஏ. அணிகளுக்கு இடையிலான போட்டி நியூயார்க்கில் ஜூன் 12 ஆம் தேதியும், இந்தியா, கனடா இடையிலான போட்டி ஜூன் 15 இல் ப்ளோரிடாவிலும் நடைபெறுகிறது. குழு போட்டிகள் முடிந்த பின்னர் சூப்பர் 8 போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள்:
ஏலியன்கள் குறித்த உண்மையை மறைத்த அமெரிக்கா. விசாரணையில் வெளிவந்த ரகசியங்கள்!
T20 World Cup: India-Pakistan.

டி20 உலகக் கோப்பை போட்டிகள் முதல் முறையாக வட அமெரிக்காவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவும், மேற்கிந்தியத் தீவுகளும் இணைந்து இந்த போட்டியை நடத்துகின்றன. போட்டிகளை நடத்துவதால் தானாக  இரு அணிகளும் தகுதிபெற்றுள்ளன. நடப்புச் சாம்பியானான இங்கிலாந்து, அதே பிரிவில் தனது பரம எதிரியான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

பி பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன. சி பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், உகாண்டா மற்றும் பப்புவா நியூகினியா ஆகிய அணிகளும் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகளும் இடம்பெற்றுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com