டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: 6-வது இடத்துக்கு முன்னேறிய சுப்மன் கில்

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய இளம் கேப்டன் சுப்மன் கில் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
Shubman Gill
Shubman Gillimg credit - zeenews.india.com
Published on

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோ ரூட் ‘நம்பர் ஒன்’ இடத்தை பறிகொடுத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 22 மற்றும் 6 ரன் வீதமே எடுத்து சொதப்பிய ரூட் 21 புள்ளிகளை இழந்து 868 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதே டெஸ்டில் சதம் அடித்த மற்றொரு இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் மீண்டும் ‘நம்பர் ஒன்’ (886 புள்ளி) அரியணையில் ஏறினார்.

பர்மிங்காமில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் ஏராளமான சாதனைகளை படைத்தார்.

பர்மிங்காம் டெஸ்டில் 269 மற்றும் 161 ரன்கள் குவித்து வரலாறு படைத்த இந்திய கேப்டன் சுப்மன் கில் இதன் மூலம் 147 புள்ளிகளை சேகரித்ததுடன் தரவரிசையில் 15 இடங்கள் எகிறி 6-வது இடத்தை (807 புள்ளி) பிடித்துள்ளார்.

அவர் டாப்-10 இடத்திற்குள் நுழைந்திருப்பது இதுவே முதல்முறையாகும். இதே போல் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் 16 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பெற்றுள்ளார். இந்தியாவின் ரிஷப் பண்ட் 7-வது இடத்திலும் (ஒரு இடம் குறைவு), இங்கிலாந்தின் பென் டக்கெட் 12-வது இடத்திலும் (4 இடம் சறுக்கல்) இருக்கிறார்கள்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் டாப்-10 இடங்களில் மாற்றமில்லை என்றாலும், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டை தவற விட்டதால் அதற்காக 9 புள்ளிகளை இழந்து 898 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

இதையும் படியுங்கள்:
கவாஸ்கர், விராட் கோலியின் சாதனைகளை தகர்த்த சுப்மன் கில்
Shubman Gill

ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும், வங்காளதேசத்தின் மெஹிதி ஹசன் மிராஸ் 2-வது இடத்திலும் உள்ளனர். தென்ஆப்பிரிக்காவின் வியான் முல்டர் 12 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்திருக்கிறார்.

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்தில் தொடருகிறார். ரோகித் சர்மா 3-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com