ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகப்கோப்பை - இன்றைய மோதலில் வெற்றி பெற போவது இராமர் தேசமா? இராவண தேசமா?

ICC Women's T20 Cricket World Cup
India vs Sri lanka
Published on

ஐசிசி மகளிர் டி 20 உலகப்கோப்பை துபாயில் உள்ள ஷார்ஜாவில்  நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், இரு லீக் சுற்றுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றுக்களின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதியில் விளையாடத் தகுதி பெறும். அரையிறுதியில் நாக் அவுட் முறையில் 2 போட்டிகள் நடைபெறும் அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

ஏ பிரிவில் பங்கேற்றுள்ள இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரித்சிங் கழுத்தில் காயமடைந்த நிலையில், இன்று (அக்டோபர் 9) இரவு 7.30 மணிக்கு இலங்கை அணியிடம் மோத உள்ளது இந்திய அணி. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோற்ற இந்திய அணி இரண்டாவது போட்டியில் வீறு கொண்டு எழுந்து பாகிஸ்தானை வெற்றிக் கொண்டு  உற்சாக நிலையில் உள்ளது.

மறுபுறும் சாமரி அட்டப்பட்டு தலைமையில் விளையாடிய இலங்கை அணி முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்று அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியாவிடமும்  தோற்று, இன்று கட்டாய வெற்றியை நோக்கி உள்ளது. இந்திய அணிக்கும் இதே நிலை தான் .இன்றைய போட்டியில் கட்டாய வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் இரண்டு அணிகளும் இன்று வாழ்வா சாவா போராட்டத்தில் உள்ளன. 

இதையும் படியுங்கள்:
இலங்கை அணிக்கு ஏற்றம் தந்த ஜெயசூர்யா!
ICC Women's T20 Cricket World Cup

இன்றைய போட்டியில் கேப்டன் ஹர்மன் பிரித்சிங் காயம் காரணமாக விளையாடுவது சந்தேகமாக உள்ளது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஸ்மிரிதி மந்தனாவும் ஷபாலி வர்மாவும் இதுவரை சரியாக ஆடாத நிலையில், இன்று துவக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அடுத்து பேட்டிங் ஆட வரும் ஜெமிமா, தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் ஆகியோரும் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பவுலிங்கில் அருந்ததி ரெட்டியும் ஸ்ரேயங்கா பாட்டீலும் தங்கள் கடமைகளை சரிவர செய்கின்றனர் .

இந்திய இலங்கை அணிகள்  இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 19 போட்டிகளிலும் இலங்கை 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு இல்லை. என்ன தான் இந்திய அணி இலங்கை அணியை விட வலுவாக இருந்தாலும் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவை வென்றதையும் கணக்கில் கொண்டு எதிரியை குறைத்து மதிப்பிட வேண்டாம். இரு அணிகளுமே கட்டாய வெற்றியை எதிர் நோக்கியுள்ளதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com