இனி ஆட்டம் வேற லெவல்! ஒருநாள், டி20 உலகக்கோப்பை தொடர்களில் ஐசிசி கொண்டு வந்த அதிரடி மாற்றங்கள்!

இனி ஒவ்வொரு போட்டியும் ஒரு திரில்லர்! உலகக் கோப்பை வரலாற்றில் புதிய திருப்புமுனை.
icc changes World Cup formats
icc jaishah icc
Updated on

கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரையில் அதில் அதிக மதிப்புமிக்கதாக கருதப்படுவது உலக கோப்பை தொடர்கள் தான். உலகம் முழுக்க பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கொலோச்சி வந்தாலும் இந்தியா மற்றும் அதன் துணை கண்டங்களில் கிரிக்கெட் மட்டுமே பிரதான விளையாட்டாக இருக்கிறது. இதற்கான ரசிகர்கள் கூட்டம் இங்கு மிகப்பெரியது. அதன் காரணமாகவே நீண்ட காலமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அதிக வருமானம் தரும் அணியாக இந்தியா இருக்கிறது.

​சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஒருநாள் உலகக்கோப்பை போட்டி மற்றும் டி20 உலகக்கோப்பை போட்டி வடிவங்களில் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுடன், போட்டிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கவும் செய்கின்றன. ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து ஏராளமான சீர்திருத்தங்களை செய்து வருகிறார். இங்கிலாந்தின் எடின்பரோவில் நடைபெற்ற ஐசிசி ஆண்டு பொதுக்கூட்டத்தில் உலகக்கோப்பை தொடர்களில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டன.

​சூப்பர் சீரிஸ் தகுதிச் சுற்று & முதன்மை சுற்று:

2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் 'சூப்பர் சீரிஸ்' மற்றும் 'சூப்பர் 7' ஆகிய சுற்றுகள் அறிமுகப்படுத்தப்பட்டு போட்டியின் விறுவிறுப்பை கூட்ட உள்ளன. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 14 அணிகள் பங்கு பெற உள்ளன.

தர வரிசையில் இறுதியில் இருக்கும் மூன்று அணிகள் நேரடியாக முதன்மை சுற்றுக்கு செல்ல தகுதி பெறாது. அந்த 3 அணிகள் 'சூப்பர் சீரிஸ்' தகுதிச் சுற்றில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஒரே ஒரு அணி மட்டும் முதன்மை சுற்றுக்கு தகுதி பெறும். மற்ற இரண்டு அணிகளும் உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறும். இதனால், போட்டியில் பங்கு பெற்றுள்ள 14 அணிகளில் 2 அணிகள் வெளியேறி 12 அணிகள் முதன்மை சுற்றுக்கு தகுதி பெறுகின்றன.முதன்மை சுற்றில் கலந்து கொள்ளும் 12 அணிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும்.

சூப்பர் 7சுற்று மற்றும் அரை இறுதி சுற்று :

முதன்மை சுற்றில் இரண்டு குழுவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் (6) சூப்பர் 7 இல் விளையாட முதலில் தகுதி பெறுகின்றன. ஒட்டுமொத்த செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டு குழுவிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக செயல்பாட்டின் அடிப்படையில் 4 வது இடத்தை பிடிக்கும் அணி 7 வது அணியாக தகுதி பெறும். இந்த சுற்று கடைசி ஆட்டம் வரை எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.

புள்ளி பட்டியலின் அடிப்படையில் சூப்பர் 7 பிரிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுகின்றன. அதில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் உலகக் கோப்பையின் இறுதி போட்டிக்கு தகுதி பெறுகின்றன. இது போட்டியில் வெல்லும் அணிக்கு உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வழங்கப்படும்.

india won T20 World Cup
icc T20 world cup Cricinfo

டி20 உலகக் கோப்பை தொடரிலும் மாற்றம்:

டி20 உலகக் கோப்பையிலும் ஐசிசி நிறைய மாற்றங்களைச் செய்துள்ளது. 20 அணிகள் டி20 உலக கோப்பையில் பங்கேற்க உள்ளது, இதை தலா 4 அணிகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு , 5 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் 10 சுற்றுக்கு தகுதி பெறும்.

​சூப்பர் 10 சுற்று:

இந்த சுற்றில் 10 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்கும் , அதில் இரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதில் எலுமினெட்டர் சுற்றும் உள்ளது. இது பார்வையாளர்களுக்கு அதிக உற்சாகத்தையும் ஆர்வத்தையும் தூண்டக்கூடும். அரையிறுதியில் தகுதி பெறும் 2 அணிகள் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்கும். புதிய அதிரடி மாற்றங்கள் உலகக்கோப்பை போட்டிகளை மேலும் சுவாரஸ்யம் மிகுந்ததாக மற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com