ஐ.எல்.டி20: துபாய் கேபிடல்ஸ் அணியின் தலைவர் ஆனார் டேவிட் வார்னர்!

David Warner
David Warner

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்கார்ரான டேவிட் வார்னர், இன்டர்நேஷனல் லீக் டி-20 லீக் போட்டி 2024 இல் துபாய் கேபிடல்ஸ் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக துபை கேபிடல்ஸ் அணியுடன் வார்னர் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இது இரண்டுமுறை இறுதிப் போட்டியை எட்டிய தில்லி கேபிடல்ஸ் அணியின் துணை நிறுவனமாகும். 2016 ஆம் ஆண்டில் டேவிட் வார்னர் ஐ.பி.எல். போட்டியின்போது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டம் பெற அணியை வழிநடத்தியவர் குறிப்பிடத்தக்கது.

37 வயதான டேவிட் வார்னர் தலைமையிலான இன்டர்நேஷனல் டி 20 2024 போட்டி ஜனவரி 20 முதல் பிப்ரவரி 18 வரை நடைபெறுகிறது. இதில் துபை கேபிடல்ஸ் அணிக்கு தலைமையேற்கிறார் 37 வயதான டேவிட் வார்னர். முன்னதாக நடைபெற்ற ஒரு போட்டியில் கேபிடல்ஸ் அணி தகுதிபெறும் போட்டியில் எம்.ஐ. எமிரேட்ஸ் இடம் தோல்வி அடைந்தது.

டேவிட் வார்னர் தற்போது ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்தி வருகிறார். ஆஸ்திரேலியா பெர்த் மற்றும் மெல்போர்னில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்டுகளில் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் சிட்னியில் நடைபெற உள்ளது.

 டெஸ்ட் கிரிக்கெட்டில் வார்னரின் கடைசி போட்டியாகும் இது. இந்த போட்டிக்கு பிறகு சிவப்பு பந்தில் விளையாடுவதிலிருந்து ஓய்வுபெறப் போவதாக வார்னர் அறிவித்திருந்தார். இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 208 ரன்களை குவித்துள்ளார் வார்னர். முதல் டெஸ்டில் அவர் 164 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
இந்திய மண்ணில் சச்சின் சாதணையை முறியடித்த டேவிட் வார்னர்...எப்படி தெரியுமா?
David Warner

டேவிட் வார்னர் ஓய்வை அடுத்து ஆஸ்திரேலிய அணியின் அடுத்த தொடக்க ஆட்டக்காரர் யார் என்பது குறித்து பெரிய விவாதமே நடந்து வருகிறது. ஹாரிஸ், கிரீன், மாட் ரென்ஷா, கேமரோன் பான்கிராப்ட் ஆகியோர் இந்த போட்டியில் உள்ளனர். எனினும் கேமோரன் பான்கிராப்டுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதில் சுவாரஸ்மான தகவல் என்னவெனில், 2021 டி 20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த போது டேவிட் வார்னர், சிறந்த பேட்ஸ்மெனாக தெரிவு செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற போதிலும், வார்னர் 7 போட்டிகள் 289 ரன்கள் குவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com