எம்.எஸ்,தோனி பதிரானாவிடம் உன்னைப் பார்த்தால் பயமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறாராம். இதுகுறித்து விளக்கமாக பார்ப்போம்.
இந்தியாவில் நடத்தப்படும் இந்த ஐபிஎல் தொடர் கடந்த 2008ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 16 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் விராட் கோலி ஆவார். அதேபோல், கிறிஸ் கெயில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் ஆவார். லசித் மலிங்கா அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் ஆவார்.
அந்தவகையில் இந்திய மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இந்த மாதம் 22ம் தேதி தொடங்கவுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுத்துவிட்டனர்.
இம்முறை யார் கோப்பை அடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் எந்த வீரர்களெல்லாம் சிறப்பாக விளையாடப் போகிறார்கள்? யாரெல்லாம் கம்பேக் கொடுக்கப்போகிறார்கள்? யாரெல்லாம் சொதப்ப போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்புகளும் அதிகம்.
பல வீரர்களும் ரசிகர்களும் இதுகுறித்து விவாதிக்க ஏற்கனவே ஆரம்பித்துவிட்டனர். இலங்கை வீரர் பதிரானா குறித்து எம்.எஸ்.தோனி பேசியிருக்கிறார்.
பதிரானா வேகப்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிப்பவர். இதனால் சென்னை அணியின் வெற்றிக்கு இவரின் பங்கு தேவை என்றே கூறலாம். இதற்கிடையேதான் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தனது பவுலிங் ஆக்ஷனை மாற்றினார். மலிங்காவின் கை ஆக்க்ஷனை விட சற்று மேலே இருக்கும் படி மாற்றியுள்ளார். இந்த புது ஆக்சன் ஆனது அவருக்கு செட் ஆகவில்லை. இதனால் அவர் தொடர்ந்து மாற்றி வருகிறார்.
இதனால், அவருக்கு இந்த புது ஆக்ஸன்ஸ் எதுவுமே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆகையால், வரும் போட்டிகளில் எப்படி விளையாடப் போகிறார் என்பதை எதிர்நோக்கி பலரும் காத்திருக்கின்றனர்.
இப்படியான நிலையில், எம்.எஸ் தோனி பதிரானா குறித்து அவரிடமே பேசியிருக்கிறார். கை ஆக்ஷன் மாறினாலும் பரவாயில்ல. உன்னுடைய சமீபத்திய ஃபார்ம் எனக்கு கொஞ்சம் பயத்தை ஏற்படுத்துகிறது என்று சிரித்துக் கொண்டே கூறியுள்ளார். மேலும் எதுவாக இருந்தாலும் சரி, உன் மனம் உறுதியாக இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று பேசியிருக்கிறார்.