

இலங்கையில் தற்போது இந்தியா, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 4 வது போட்டியில் இந்தியாவின் ஏ மற்றும் இலங்கையின் ஏ அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பத்தில் சற்று தடுமாற தொடங்கியிருந்தது. வைபவ் சூர்யவன்ஷி (21) , திலக் வர்மா (23), ருதுராஜ் கெய்க்வாட் (32 ரன்கள்) ஆகியோர் மட்டும் சிறிய அளவில் ரன்களை சேர்க்க இந்திய அணி 143 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. ஆயினும் எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த
சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் ஆல்-ரவுண்டர் விப்ராஜ் நிகம் ஆகியோர் இணைந்து, சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி அணிக்கு கௌரவமான ரன்களை பெற்றுக் கொடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 265 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி பேட்டிங்கை தொடங்கும் முன்னரே , இலங்கை அம்பையர்கள் ஒரு வித்தியாசமான தண்டனையை இந்திய அணிக்கு வழங்கினார்கள். இந்திய அணையின் விப்ராஜ் நிகம் ஆடுகளத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் ஓடியதாக கூறி, பிரகீத் ரம்புக்வெல்ல மற்றும் சாந்தா பொன்சேகா ஆகியோர் இந்திய அணிக்கு 10 ரன்கள் அபராதம் விதித்தனர். இந்த அபராதத்தின் மூலம் இலங்கை அணி பேட்டிங் தொடங்குவதற்கு முன்னரே 10 ரன்கள் அதன் கணக்கில் சேர்க்கப்பட்டது. இதன் காரணமாக இந்திய அணி போட்டியில் தோல்வியுற்றது.
இலவசமாக கிடைத்த 10 ரன்களுடன் ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணி, 50-வது ஓவரின் இறுதியில் பந்து சமிக்கா குணசேகரா லெக்-பையில் பட்டு ஒரு ரன் எடுக்கப்பட்டது. இந்த ரன் தவறானது என்று இந்திய கேப்டன் திலக் வர்மா அம்பையர்களிடம் முறையிட்டார். ஆனால் , அவர்கள் அதற்கு ஒரு ரன்னை வழங்கி ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தனர்.
இறுதிவரை போராடி இலங்கை அணியினால் 265 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால், இந்த போட்டி சமனில் இருந்தது.
இறுதியாக அணிகளின் வெற்றியை உறுதி செய்ய சூப்பர் ஓவர் போட்டி நடத்தப்பட்டது. அப்போது போதிய வெளிச்சமின்மை ஏற்பட்டதால் மின்விளக்குகளை பயன்படுத்தலாமா ?அல்லது ஆட்டத்தை தவிர்க்கலாமா? என்ற சூழல் நிலவியது. இறுதியில் சூப்பர் ஓவர் போட்டி நடத்தப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 16 ரன்கள் அடித்தது.17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் சூர்யான்ஷ் ஷெட்ஜ் ஜோடி களம் இறங்கியது. ஆயினும் 9 ரன்களை மட்டுமே இந்திய அணி எடுத்து வெற்றி வாய்ப்பை இழந்து.
போட்டி முடிந்ததும் இலங்கை அணியின் விஷ்வ ஹாலம்பகே, இந்திய அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷியைப் பார்த்து, "ஆட்டம் முடிந்தது, வீட்டுக்கு கிளம்பி போ" என்று திமிராக பேசி வம்பிழுத்துள்ளார். இதனால் கோபமான சூர்யவன்ஷி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. உடனே சக இருவரையும் பிரித்து நிலைமையை அமைதியாக்கினர்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் , இலங்கை அணியின் அனுபவ வீரர்கள் சிலர் , மோசமான வெளிச்சத்தில் இந்திய அணியை சூப்பர் ஓவர் விளையாட அனுமதி இருக்கக் கூடாது. அதற்காக இந்திய அணியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் வாரிய (SLC) அதிகாரி ஒருவர் , "விளையாடத் தகுதியற்ற அந்த வெளிச்சத்தில் முதலில் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டிருக்கவே கூடாது" என நடுவர்களின் முடிவை விமர்சித்துள்ளார்.
இந்த போட்டியின் தோல்விக்கு இலங்கையை சார்ந்த நடுவர்களின் முடிவு பெரிதும் காரணமாக இருந்துள்ளது. அவர்களின் ஒருதலை பட்சமான முடிவுகள் இந்திய அணியின் கோபத்தை தூண்டி இருக்கலாம். இது இப்போதல்ல பல ஆண்டு காலமாக நடுவர்களின் மோசமான தீர்ப்புகளினால் இந்திய அணி பலமுறை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி , ராகுல் டிராவிட் போன்ற வீரர்கள் நடுவர்களின் தவறான தீர்ப்பினால் ஆட்டம் இழந்துள்ளனர். இது போன்ற காரணங்களினால் ஆட்டத்தின் போக்கு ஒரு பக்கமாக போய்விடுகிறது. ஆயினும் சச்சின் டெண்டுல்கர் இந்த விஷயங்களில் பலமுறை பெருந்தன்மையாக நடந்து கொண்டு பாராட்டை பெற்று இருக்கிறார். இந்தியாவின் எதிர்கால நட்சத்திரமான வைபவ் சூரியவன்ஷி போன்றோர் , இக்கட்டான நேரங்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.