விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

Gautam Gambhir
Gautam Gambhir
Published on

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே டெஸ்ட் தொடர் ஆரம்பமாகியிருக்கிறது. அந்தவகையில் இந்திய வீரர் நிதிஷ் ஒரு கருத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமானது. இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியால், ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை எதிர்க்கொள்ள முடியாமல் தடுமாறி வந்தது. இதனையடுத்து ரிஷப் பண்ட் மற்றும் நிதிஷ் ரெட்டி இணைந்து 100 ரன்களை கடக்க உதவினர். அந்தவகையில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 49.4 ஓவர்களில் 150 ரன்களில் ஆல் அவுட்டானது.

இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா பேட்டிங்கில் களமிறங்கியது. ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்க்கொள்ள முடியாமல் 51.2 ஓவர்களிலேயே ஆல் அவுட்டானது. இதில் ஆஸ்திரேலியா அணி 104 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

நேற்றைய ஆட்டம் குறித்து நிதிஷ் ரெட்டி பகிர்ந்ததைப் பார்ப்போம். “பெர்த் மைதானத்தை பற்றி நானும் நிறைய கேள்விப்பட்டுள்ளேன். இங்கே பயிற்சி எடுத்தபோது கம்பீருடன் நாங்கள் பேசினோம். அப்போது நீங்கள் கடுமையான பவுன்சர்கள் அல்லது கூர்மையான பந்துகளை எதிர்கொள்ளும்போது அதை தோளில் வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் நாட்டுக்காகத் தோட்டாவை ஏற்றுக்கொள்வதுபோல் உணர வேண்டும் என்று கம்பீர் சொன்னார். அது எனக்கு நிறைய உதவி செய்தது. நிறைய உத்வேகத்தை கொடுத்தது. பெர்த் மைதானத்தில் அதிகப்படியான வேகம் இருக்கும் என்று அனைவரும் சொன்னார்கள். நானும் அந்த பந்துக்களை தோட்டாக்கள் எதிர்க்கொள்வது போலவே உணர்ந்தேன். இதுதான் கம்பீர் சாரிடம் நான் கேட்ட சிறந்த ஆலோசனை.” என்று பேசினார்.

இதையும் படியுங்கள்:
ஐபிஎல் எப்போது தொடக்கம்? வெளியான செய்தியால் ரசிகர்கள் குஷி!
Gautam Gambhir

கவுதம் கம்பீரின் பயிற்சி குறித்தான கேள்விகளுக்கு இது ஒரு பதிலாக இருக்கிறது. ஏனெனில், நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு கம்பீரே காரணம் என்றும், அவரின் பயிற்சி சரியில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றால் மட்டுமே கம்பீர் மீதான விமர்சனங்கள் முடிவுக்கு வரும்.


Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com