Ind Vs Aus: அணியிலிருந்து விலகும் ரோகித்… அப்போ கேப்டன் பதவி யாருக்கு?

Rohit sharma with Bumrah
Rohit sharma with Bumrah
Published on

இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. அந்தவகையில் கேப்டன் ரோகித் ஷர்மா முதல் இரண்டு போட்டிகளிலிருந்து விலகியதாக செய்திகள் வந்துள்ளன.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையில் நாளை மூன்றாவது டி20 போட்டி நடைபெறவுள்ளது. இதனையடுத்து இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதில் முதல் போட்டியில் அல்லது முதல் இரண்டு போட்டிகளிலிருந்து ரோகித் ஷர்மா விலகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

அவர் தனிப்பட்ட விஷயத்திற்காக விலகவுள்ளதாக பிசிசிஐ வட்டாரத்திலிருந்து செய்திகள் வந்துள்ளன. இதனால் அந்த போட்டிகளில் யார் கேப்டனாக செயல்படுவார் என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது. எப்போது இதுபோன்ற சூழ்நிலையில் துணை கேப்டனே கேப்டனாக செயல்படுவார். ஆனால், சமீபத்தில் வங்கதேச இந்திய அணிகள் இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் துணை கேப்டன் யாரும் இல்லை.

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா அடுத்து இந்திய அணியை வழி நடத்தியவர் கே.எல்.ராகுல். இவர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியிலும், 2022இல் வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியை வழிநடத்தி இருக்கிறார். இதனையடுத்து அவருக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டதால், கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.

இதையும் படியுங்கள்:
அரையிறுதிக்குள் நுழைந்த தென்னாப்பிரிக்கா - இலங்கையை வீழ்த்திய இந்தியா!
Rohit sharma with Bumrah

ஆனாலும் அனுபவத்தின் அடிப்படையில் அவருக்கு கேப்டன் பதவிக் கொடுக்கலாம். ஆனால், பிசிசிஐ அவருக்கு கேப்டன் பதவி கொடுக்கக்கூடாது என்று தெளிவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களின் போது வேகப் பந்துவீச்சாளர் பும்ரா இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்தார்.

இந்தநிலையில் பும்ராவுக்கு கேப்டன் பதவியை வழங்கலாம். அல்லது டி20  மற்றும் ஒருநாள் அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கும் கில்லுக்கும் வாய்ப்பு வழங்கலாம்.

எப்படியாயினும் கேல்.எல்.ராகுல், பும்ரா, கில் ஆகிய மூவரில் ஒருவர்தான் கேப்டன் பதவியை ஏற்பார். அதில் பும்ராவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com